அனைவரும் வாழ்க்கையில் மிகப் பெரிய கனவுகளை காண்பார்கள். ஆனால் அவற்றை நனவாக்க அப்படியே ஈடுபாடு காட்டுவது இல்லை
லட்சியத்தை அடைவது எல்லோருக்கும் சாத்தியமா?
இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார் எகிப்தின் வாள்வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ். பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் அவர் செய்த சாதனை, அந்த ஈடுபாடு, உறுதி, ஆர்வம் ஆகியவை இலக்கை அடைய கடின உழைப்பை மேற்க்கொள்ளும் அனைவருக்கும் மிகப் பெரிய உந்து சக்தியாக உள்ளது .
நடா ஹபீஸ், ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் மிக ஆர்வமாக பங்கேற்றார். “மேடையில் நீங்கள் இரண்டு வீரர்களை மட்டுமே பார்த்திருக்கலாம், ஆனால் உண்மையில் மூன்று பேர் இருந்தார்கள்! அது நான், என் போட்டியாளர், மற்றும் இன்னும் நம் உலகிற்கு வராத என் குட்டி குழந்தை!” “நான் ஒரு சிறிய ஒலிம்பியனை சுமந்து கொண்டிருந்தேன்!” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.என உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார் நடா. இந்த வார்த்தைகள் அவருடைய முயற்சியையும் ஆர்வத்தையும், தைரியத்தையும், ஊத்வேகத்தையும் வெளிப்படுத்துகின்றன.
மிகப் பெரிய ஒரு போட்டியில் பங்கேற்பது, அது ஒருவிதமான சவாலாக இருந்த போதிலும் , ஆனால் நடா, தான் கர்ப்பமாக இருந்தபோதும் தைரியமாக மேடையில் நின்று போட்டியிட்டார். அமெரிக்காவின் எலிசபெத் டார்டகோவ்ஸ்கியை முதல் சுற்றில் தோற்கடித்தார். மேலும் கொரியாவின் ஜியோன் ஹயோங்கிடம் தோல்வி அடைந்தாலும், அவர் அதில் கூட பெருமையை உணர்ந்தார். “எனது விடா முயற்சியினால் பெருமிதம் அடைந்தேன்,” என்றார் நடா.
“கர்ப்பமாக இருக்கும்போது ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் எகிப்திய வீராங்கனை என்ற அந்தஸ்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .. கர்ப்பகாலத்தின் ரோலர் கோஷ்டர் பயபயணித்தேன் , உடல் மற்றும் மனதளவிலான சவால்களைச் சந்தித்தேன். மேலும் நல் எண்ணங்களுடன் வாழ்க்கை மற்றும் விளையாட்டின் சமநிலையை பேணுவதற்கும் என்னை விட்டுக்கொடுக்காமல் போராடினேன் ,” என்று குறிப்பிட்டார் நடா.
நடா ஹபீஸின் கதை நாம் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக அமைகின்றது. எந்தத் தடைகளையும் கடந்து நம்முடைய இலக்குகளை அடைய முடியும் என்பதில் நடாவின் கதை ஒரு உன்னத எடுத்துக்காட்டாக உள்ளது.
• நம் எல்லைகளை சிறியதாக அமைக்காமல் வாழ்க்கையை பரந்து பட்ட அணுகுமுறையில் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வது அவசியம்.
• சவால்களை சந்திக்கும்போது, அவர்கள் எவ்வளவு பெரியதோ அல்லது எவ்வளவு சிரமமோ என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நம்முடைய முயற்சியினை கைவிடாமல் முன்னெடுக்க வேண்டும்.
• பெரும்பாலானவர்களுக்கு, நடா ஹபீஸ், ஒரு நட்சத்திரமாக, தனக்கே உரிய முயற்சி மற்றும் வெற்றியைக் காட்டினார்.
நடா ஹபீஸின் கதை உங்களையும் உந்துதலாக உருவாக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நாம் எத்தனை தடைகளை சந்தித்தாலும், நம்முடைய கனவுகளை அடைய முடியும் என்பதை நிரூபிக்கின்றது.
உங்களை உங்கள் பாதையில் முன்னேற உந்துகின்றது! உங்கள் ஆர்வத்திற்கும், இலக்குகளுக்கும் எல்லை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!