Description
TN Block Educational Officer – BEO
நீங்கள் Block Educational Officer – BEO தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா?
Professor Academy வழங்கும் 3 மாத BEO Coaching மூலம் முழு பாடத்திட்டம் (Syllabus) , Live & Recorded Classes, Mock Tests, Study Materials, Doubt Clearing Support அனைத்தையும் பெறுங்கள். இன்றே BEO Course இல் சேர்ந்து உங்கள் அரசு வேலை கனவை நனவாக்குங்கள்!
BEO Exam என்றால் என்ன?
BEO என்பவர் வட்டார கல்வி அலுவலர் (Block Education Officer) ஆவார். ஒரு மாவட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு வட்டாரத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கல்வி, நிர்வாகம் மற்றும் மேற்பார்வையிடும் பொறுப்புகளை முழுமையாக கவனிப்பது இவரது அடிப்படைப் பணியாகும்.
ஏன் TRB BEO தேர்வு மிகவும் முக்கியமானது?
ஒரு வட்டாரத்தில் பொதுவாக 100 முதல் 150 பள்ளிகள் வரை இருக்கும்.
அதில்:
-
ஆரம்பப் பள்ளிகள்
-
நடுநிலைப் பள்ளிகள்
-
சில சமயம் உயர்நிலைப் பள்ளிகள்
இந்த பள்ளிகளில் பணிசெய்யும் 200 முதல் 250 ஆசிரியர்களின் செயல்பாடுகளும் மற்றும் கற்பித்தல் தரமும் BEO-வின் மேற்பார்வையில் கீழ் இருக்கும். மேலும் BEO செயல்பாடு என்பது வட்டார அளவிலான அனைத்து பள்ளிகளுக்கும், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆன DEO -விற்கும் முக்கிய பாலமாக இருக்கும்.
வட்டார கல்வி அலுவலரின் பங்கு ஏன் இத்தனை முக்கியம்?
BEO-வின் செயல்பாடுகள் வட்டாரத்தின் முழு கல்வித் தரத்தையும் நேரடியாக நிர்ணயிக்கின்றன. அவர்களின் முக்கியப் பொறுப்புகள்:
-
பள்ளிகளில் கற்பித்தல் தரத்தைப் பரிசோதித்தல்
-
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கண்காணித்தல்
-
பள்ளிகளின் அன்றாட நிர்வாக மற்றும் கல்விச் செயல்பாடுகளை மேற்பார்வையிடல்
-
மாநில மற்றும் மத்திய அரசு கல்வித் திட்டங்களை பயனுறச் செயல்படுத்துதல்
மேலும் BEO கவனிக்கும் முக்கிய செயல்கள்:
-
பாடப்புத்தகங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துதல்
-
ஆசிரியர்களின் வருகை மற்றும் பணிச்சுமையை மதிப்பீடு செய்தல்
-
வகுப்பறை கற்பித்தலின் தரத்தை ஆய்வு செய்தல்
-
பள்ளிகளில் ஏற்படும் நிர்வாக சிக்கல்கள் அல்லது குறைகளை உடனடியாக தீர்வு காணுதல்
எந்த கல்வி, நிர்வாக, அல்லது பள்ளி செயல்பாட்டுச் சிக்கலாக இருந்தாலும், வட்டார அளவில் முதலில் அணுகப்படும் பொறுப்பாளர் BEO தான்.
ஒரு வட்டாரத்தின் கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் தரமான கல்வி பெறவும் வட்டார கல்வி அலுவலரின் பங்கு மிக முக்கியமானது.
BEO – Roles and Responsibilities
1. பள்ளி கண்காணிப்பு & வகுப்பறை ஆய்வு
வட்டார கல்வி அலுவலரின் முதல் மற்றும் முக்கியப் பொறுப்பு பள்ளிகளை முறையாகப் பார்வையிடுவது.
இதன் மூலம் அவர்:
கற்பித்தல் தரம் மற்றும் பாடம் வழங்கும் முறையை மதிப்பீடு செய்கிறார்
மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தை கண்காணிக்கிறார்
வகுப்பறை நடைமுறைகள் மற்றும் கல்வித் தரநிலைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துகிறார்
2. ஆசிரியர் மேலாண்மை & தொழில்முறை ஆதரவு
BEO வட்டாரத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி வழிகாட்டியாக செயல்படுகிறார்:
ஆசிரியர்களுக்கு தேவையான கல்வி, நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்குதல்
பயிற்சி தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காணுதல்
கற்பித்தல் முறைகள் மற்றும் வகுப்பறை செயல்திறனை மேம்படுத்த உதவுதல்
3. மாணவர்கள் & பெற்றோர் கருத்து சேகரிப்பு
கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கருத்துக்களை பெறுவது முக்கியம்:
மாணவர் கற்றல் குறித்த கருத்துகளை பெறுதல்
குறைகளை சீராய்ந்து தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்குதல்
4. அரசு கல்வித் திட்டங்களை செயல்படுத்துதல்
வட்டாரத்தின் அனைத்து பள்ளிகளிலும் அரசுத் திட்டங்கள் சரிவர செயற்படுவதை BEO உறுதிப்படுத்துகிறார். இதில் சேர்ப்பவை:
- பாடப்புத்தகங்கள்
- உடைகள்
- நோட்டுப்புத்தகங்கள்
- காலணிகள்
- Hygiene kits
- கல்வி உதவித்தொகை திட்டங்கள்
மற்றும் பல…
5. கல்வி & நிர்வாக பணிகள்
அவர் மேற்கொள்ளும் நிர்வாகச் செயல்பாடுகள் வட்டாரத்தின் கல்வி ஒழுங்கைத் தீர்மானிக்கும்:
வட்டார அளவிலான பள்ளிகளின் பதிவுகளை பராமரித்தல்
ஆசிரியர் பணிவிடுப்பு, PF, ஊதிய உயர்வு, ஓய்வு போன்ற செயல்முறைகளை அனுமதித்தல்
மாவட்ட அலுவலகத்திற்கான அறிக்கைகள் மற்றும் தரவுகளை தயாரித்தல்
6. ஒருங்கிணைப்பு & அறிக்கை சமர்ப்பித்தல்
BEO பல அலுவலகங்களுடன் இணைந்து பணிபுரிகிறார்:
DEO-க்கு வழக்கமான அறிக்கைகள் சமர்ப்பித்தல்
பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், கலெக்டர் போன்றோருடனான கூட்டங்களில் பங்கேற்பு
கல்வித் திட்டங்கள், கல்விக் கொள்கைகள் மற்றும் செயலாக்கங்களை ஒருங்கிணைத்தல்
7. பதவி உயர்வு வழி (Promotion Pathway)
பணிப்பரிச்சயம் மற்றும் செயல்திறன் அடிப்படையில் BEO-கள் எதிர்காலத்தில் கீழ்க்கண்ட உயர்ந்த பதவிகளுக்கு முன்னேற்றம் பெறலாம்:
District Education Officer (DEO)
கல்வித் துறையின் பிற உயர்நிலை நிர்வாகப் பொறுப்புகள்
BEO – தேர்வு நடைமுறை (Selection Process)
வட்டார கல்வி அலுவலர் (BEO) பணியிடத்திற்கான தேர்வு நடைமுறை முழுமையாக மூன்று கட்டங்களாக நடைபெறும்:
Part A – தமிழ்த் திறன் தகுதி தேர்வு (Tamil Language Eligibility Test)
மதிப்பெண்கள்: 30 Marks
இது கட்டாயத் தகுதி தேர்வு
குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெற்றால்தான் Part B மதிப்பீடு செய்யப்படும்.
Part B – எழுத்துத் தேர்வு (Written Examination)
மொத்த மதிப்பெண்கள்: 150 Marks
பொது அறிவு, கல்வியியல், நிர்வாகத் திறன், பாடவாரி அறிவு போன்ற தலைப்புகளில் கேள்விகள் இருக்கும்.
Part C – சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
Part A மற்றும் Part B மூலம் தரவரிசை பெற்ற candidates, இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
ஏன் BEO தயாரிப்புக்கு Professor Academy-யை தேர்வு செய்ய வேண்டும்?
Professor Academy வட்டார கல்வி அலுவலர் (BEO) தேர்வுக்கு
- ஒவ்வொரு பாடத்திலும் உள்ள தலைப்புகளை தனித்தனியாக விளக்கும் வகையில் concept-wise classes நடத்தப்படுகின்றன.
- Expert doubt-clearing sessions
- துறைவாரி subject-expert mentoring
BEO தேர்வின் முதல் கட்டமான தமிழ்த் தகுதி தேர்வு மிக முக்கியமானது.
Professor Academy இந்தப் பகுதிக்கு தனியே:
- விரிவான பயிற்சி
- முக்கிய தலைப்புகளின் விளக்கம்
- Mock tests and explanations வழங்குகிறது.
மேலும் மாணவர்கள் சேர்ந்த முதல் நாளிலிருந்து தேர்வு நாள்வரை, Continuous Academic Support வழங்கப்படும்
Contact us at:
+91 7070701005,
+91 7070701009,
+91 8807108794,
+91 8124408794
Email: enquiry@professoracademy.com