GK & Educational Methodology-ல் அடித்த ஸ்கோர்! மாநில அளவில் 7-வது ரேங்க் பெற்ற மணிமேகலை

TRB History Achiever - Manimegalai M

வணக்கம்! நான் மணிமேகலை எம்., History மேஜர்

நான் இன்று ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக நிற்கிறேன் என்றால், அது அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை.  எனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களிலிருந்து நான் எப்படி ஒளிமயமான வெற்றியைத் தேடினேன் என்பதைப் பகிர விரும்புகிறேன்.

அரசியலும், வேலைப் போராட்டமும்!

வரலாற்றுப் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற எனக்கு, ஒரு தனியார் பள்ளியில் எகனாமிக்ஸ் பாடம் எடுக்கும் சூழல் ஏற்பட்டது.  எனது மேஜர் அதுவல்ல என்பதால், நாளடைவில் நான் படித்த பாடங்களையே மறந்துவிடுவோமோ என்ற பயம் என்னை வாட்டியது.  பள்ளியில் நிலவிய அரசியல் சூழல்கள் என் மனதை உறைய வைத்தன. அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்.  உலகம் தெரியாத, குடும்பத்தையும் படிப்பையும் மட்டுமே அறிந்த எனக்கு, மீண்டும் நம்பிக்கையூட்டியது என் அன்பான சகோதரிதான்.

 

சகோதரியின் நம்பிக்கை & Professor Academy

பண உதவி செய்து என்னைப் படிக்கத் தூண்டியது என் சகோதரி. ஏற்கனவே நான் Professor Academy-யின் UGC NET History மாணவியாக இருந்ததால், அவர்களின் தரமான கற்பித்தல் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது.

 

புதிய பாடத்திட்டம் (New Syllabus) வந்தபோது, பல அகாடமிகள் Educational Methodology மற்றும் GK-க்குக் Course அளிக்கவில்லை. ஆனால், இங்கே ஆசிரியர்கள் அதிகாலை 4 மணிக்கே எங்களை எழுப்பி, வகுப்புகளைத் திட்டமிட்டது ஆச்சரியமாக இருந்தது. அந்த விடாமுயற்சிதான் எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தது.

 

வெற்றியின் சூட்சுமம்:

Educational Methodology: 40-க்கு 28 கேள்விகளைச் சரியாக எதிர்கொண்டேன்.

GK: 10-க்கு 9 கேள்விகளைத் துல்லியமாக எழுதினேன்.

 

அகாடமியின் வழிகாட்டுதல்: 

இந்த இரண்டு பகுதிகளிலும் நான் எடுத்த மதிப்பெண்கள் தான், இன்று எனக்கு இந்தப் பணியைப் பெற்றுத் தந்தது. நிச்சயமாகச் சொல்கிறேன், சரியான வழிகாட்டுதல் இருந்தால் யாராலும் சாதிக்க முடியும். என் சகோதரியின் நம்பிக்கைக்கும், Professor Academy-யின் உழைப்பிற்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்களும் “இவரைப் போல” ஒரு வெற்றியாளராக மாற விரும்பினால், இன்றே professor academy -யுடன் இணையுங்கள்!

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!