தமிழகத்தில் உள்ள அரசு, மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற ஒரு அரிய வாய்ப்பாக இந்த ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு (Special TET) அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 முதல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கி வரும் Professor Academy , இந்தத் தேர்வில் நீங்கள் வெற்றி பெறத் தேவையான அனைத்து முக்கிய தகவல்களையும் இங்கே தொகுத்து வழங்குகிறது.
Click Here For TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS – Notification
யாரெல்லாம் இந்தத் தேர்வை எழுதலாம்? (Eligibility)
இந்தச் சிறப்பு தகுதித் தேர்வு அனைவருக்கும் பொதுவானது அல்ல. தற்போது பணியில் இருக்கும் கீழ்க்கண்ட ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்:
- அரசு பள்ளிகள் (Government Schools)
- அரசு உதவி பெறும் பள்ளிகள் (Government Aided Schools)
- அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (Recognized Private Schools)
மேற்கண்ட பள்ளிகளில் பணிபுரிந்து, இன்னும் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முக்கிய தேதிகள் (Important Dates to Remember)
தேர்விற்குத் தயாராகும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சரியான நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
| நிகழ்வு | தேதி |
| விண்ணப்பம் தொடங்கும் நாள் | பிப்ரவரி 18, 2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | ஏப்ரல் 10, 2026 |
| திருத்தம் மேற்கொள்ளும் காலம் (Correction Window) | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை |
| தாள் 1 (Paper 1) தேர்வுத் தேதி | ஜூலை 4, 2026 (Tentative) |
| தாள் 2 (Paper 2) தேர்வுத் தேதி | ஜூலை 5, 2026 (Tentative) |
தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் (Exam Pattern & Syllabus)
இந்த முறை பாடத்திட்டத்தில் (Syllabus) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்வுகள் நடைபெறும்.
- மொத்த மதிப்பெண்கள்: 150 மதிப்பெண்கள்.
- கால அளவு: 3 மணி நேரம்.
- வினாக்கள்: கொள்குறி வகை (Objective Type).
தேர்ச்சி மதிப்பெண்கள் (Qualifying Marks – New GO)
புதிய அரசாணையின்படி, பிரிவின வாரியாகத் தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் இதோ:
| வகுப்பு (Category) | தேர்ச்சி சதவீதம் | எடுக்க வேண்டிய மதிப்பெண் |
| General Category (OC) | 60% | 90 மதிப்பெண்கள் |
| BC, BCM, MBC, DNC, PwD | 50% | 75 மதிப்பெண்கள் |
| SC, SCA, ST | 40% | 60 மதிப்பெண்கள் |
குறிப்பு: மேற்கண்ட மதிப்பெண்களைப் பெறுவதன் மூலம் நீங்கள் எளிதாகத் தேர்ச்சி பெற்று, உங்கள் ஆசிரியர் பணியைத் தடையின்றித் தொடர முடியும்.
வெற்றி பெற Professor Academy யின் டிப்ஸ்!
முந்தைய கால வினாத்தாள்கள்:
பழைய சிலபஸ் என்பதால், முந்தைய ஆண்டு வினாக்களைப் பயிற்சி செய்வது அதிக பலன் தரும்.
நேர மேலாண்மை:
180 நிமிடங்களில் 150 வினாக்களை எதிர்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
சரியான வழிகாட்டல்:
அனுபவமிக்க வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறுவது கடினமான பாடங்களை எளிதில் புரிய வைக்கும்.
ஆசிரியப் பணியென்பது ஒரு புனிதமான சேவை மற்றும் ஒரு மிகப்பெரிய பொறுப்புமாகும், இதனை நாங்கள் முற்றிலும் உணர்ந்ததால் உங்களுக்கு தரமான TNTET Coaching-ஐ மார்ச் மாதம் 2026 முதல் தொடங்க உள்ளோம்.
Professor Academy – ஐ ஏன் TN TET Coaching -க்கு தேர்ந்தெடுக்க வேண்டும்?
Professor Academy தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்குத் தரமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஆன்லைன் பயிற்சியை வழங்கி வருகிறது.
எங்களுடைய நேரடி வகுப்புகள் மற்றும் பிரத்யேக ஸ்டடி மெட்டீரியல்கள் உங்களை முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வைக்கும்.
இந்தத் தேர்வு குறித்த சந்தேகங்கள் அல்லது ஆன்லைன் வகுப்புகளில் இணைய விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்!
Contact