TRB Chemistry-ல் வென்ற Anthuvan Clement Show-வின் நெகிழ்ச்சிக் கதை!
“சுடர்விளக்கு ஆயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்” என்பார்கள்.
நாம் எவ்வளவுதான் படித்தாலும், நம் கனவுகளைத் தட்டி எழுப்பி, இலக்கை நோக்கிச் செலுத்த ஒரு சரியான ‘லைட்டர்’ (Lighter) தேவை.
என் வாழ்வில் அந்தத் தூண்டுகோலாக, என் கனவுகளை ஒளிரச் செய்த சுடராக அமைந்தது Professor Academy.
இன்று என் சொந்த மாவட்டமான கள்ளக்குறிச்சியில், என் வீட்டிலிருந்து வெறும் 10 கி.மீ தொலைவிலேயே இருக்கும்
வெள்ளையூர் அரசுப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் (GHSS- Vellaiyur, kallakurichi) பணியாற்றுவது எனக்குக் கிடைத்துள்ள ஆகச்சிறந்த பெருமை.
பல நேரங்களில் நான் ஆச்சரியப்படுவதுண்டு, Professor Academy ஆசிரியர்கள் தூங்குவார்களா மாட்டார்களா?
அதிகாலையிலேயே எங்களை எழுப்பி, ஆன்லைன் வகுப்புகளை இவ்வளவு சுறுசுறுப்பாக எப்படி நடத்துகிறார்கள்?
ஒரு மாணவனாக நான் 100% உழைப்பைக் கொடுத்தால், எங்களை வெற்றி பெறச் செய்ய எங்கள் ஆசிரியர்களும் Coordinator-களும் 200% உழைப்பைக் கொடுக்கிறார்கள்.
அவர்களின் அந்த அர்ப்பணிப்புதான் எங்களைப் போன்ற பலரை இன்று இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
ஆன்லைன் வகுப்பா? அல்லது நேரடி வகுப்பா?
அகாடமியின் வகுப்புகள் வெறும் பாடங்களாக மட்டும் இருப்பதில்லை; அவை ஒரு சிறந்த உரையாடலாக (Interactive Sessions) இருக்கும்.
யுனிட் 10 (Unit 10):
வேதியியலில் மிக நீளமான இந்தப் பாடத்தைக் கூட, அவ்வளவு மென்மையாகவும் தெளிவாகவும் எந்த அகாடமியிலும் நடத்த முடியாது.
தொடர் தேர்வுகள்:
வகுப்பு முடிந்த கையோடு தேர்வு, பிறகு அந்த வினாக்கள் குறித்த விரிவான கலந்துரையாடல் – இதுதான் என் தயாரிப்பை வலுவாக்கியது.
கடைசி நேரப் போராட்டம்:
தேர்வு நெருங்கிய அந்த ஒன்றரை மாதங்கள், எங்களுக்காக அவர்கள் எடுத்த Test Practice மற்றும் ரிவிஷன் வகுப்புகள், எங்களை விட எங்கள் வெற்றிக்காக அவர்கள் அதிகம் உழைத்ததைக் காட்டியது.
குடும்பத்தின் எதிர்பார்ப்பும் தந்தையின் கனவும்:
என் குடும்பத்தில் அனைவரும் அரசுப் பணியில் உள்ளனர்.
அக்கா Group-2 தேர்விலும், தம்பி காவல்துறைத் தேர்விலும் வெற்றி பெற்றிருந்தனர்.
அந்தச் சூழலில் நான் மட்டும் தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தது, என் குடும்பத்தினருக்கு ஒருவித அக்கறைய கலந்த கோபத்தை ஏற்படுத்தியது.
ஆனால், என் தந்தை என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.
“என் மகன் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக வேண்டும்” என்ற அவருடைய கனவுதான் என்னை இன்று சாதிக்கத் தூண்டியது.
SMC டூ அரசு ஆசிரியை (The Final Leap):
கடந்த 2.5 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் SMC (School Management Committee) மூலம் பணியாற்றி வந்தேன்.
முந்தைய PG TRB தேர்வில் இறுதிப் பட்டியலில் வாய்ப்பை இழந்த வலி எனக்கு இருந்தது.
இம்முறை பாடத்திட்டம் (Syllabus) மாறினாலும், அகாடமியின் துணையோடு இரட்டிப்பு உழைப்பைக் கொடுத்தேன்.
இன்று அந்த உழைப்பிற்குப் பலன் கிடைத்துள்ளது!
குறைந்த கட்டணம் – நிறைவான சேவை:
இன்றைய சூழலில் இவ்வளவு குறைவான கட்டணத்தில், லாப நோக்கமின்றி, கனவு காண்பவர்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இயங்கும் ஒரே அகாடமி Professor Academy தான்.
தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு என் தந்தை கண்ட கனவும், அகாடமி அளித்த தூண்டுகோலுமே சாட்சி.
உழைப்பிற்கு மதிப்பளிக்கும் Professor Academy-யிற்கு என் கோடான கோடி நன்றிகள்!
உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்க:
நீங்கள் அரசு ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தால்,
சரியான வழிகாட்டுதலுக்கு Professor Academy-யை அணுகுங்கள்.
எங்களது Live classes + recorded classes, Mentorship மற்றும் Test series உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.
தொடர்புக்கு: +91 7070701005 / 7070701009