இதுதான் என்னோட life-னு முழுமனதாய் படித்தேன்! TRB Physics-ல் வென்ற Yasotha V  வெற்றிக் கதை!

TRB Physics Achiever - Yasotha V

வணக்கம்! நான் Yasotha V

2024 நவம்பரில் Professor Academy-யில் இணைந்தபோது, என் முன்னே பல சவால்கள் இருந்தன. 

 

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக, குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டே படிப்பது என்பது சாதாரண காரியமல்ல.  ஆனால், “இது என் வாழ்க்கை, எப்படியாவது அரசுப் பணி பெற வேண்டும்” என்ற வைராக்கியம் என்னைத் தொடர்ந்து ஓட வைத்தது. 

 

இன்று நீலகிரி மாவட்ட அரசுப் பள்ளியில் முதுகலை Physics-ல் ஆசிரியராகப் பணியாற்றுவது என் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி.

எனது வெற்றிக்கு உதவிய அகாடமியின் சிறப்பம்சங்கள்:

 

மீண்டும் மீண்டும் கற்கும் வசதி:  அகாடமியில் வழங்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் (Recorded Videos) எனக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. ஒரு பாடத்தைப் புரியும் வரை பலமுறை பார்த்தேன். இது இயற்பியல் போன்ற கடினமான பாடங்களில் எனக்குத் தெளிவான புரிதலைத் தந்தது.

 

மறுமுறை தேர்வு எழுதும் வாய்ப்பு: ஒரே தேர்வை பலமுறை எழுதும் வசதி இருந்ததால், என் தயாரிப்பு முறையை நான் மெருகேற்றிக் கொள்ள முடிந்தது.

 

Test Explanations: 

ஒவ்வொரு தேர்விற்கும் பிறகு அகாடமி வழங்கும் விளக்கங்களை உன்னிப்பாகக் கவனிப்பேன். நான் எங்கே தவறு செய்தேன் என்பதை உணர்ந்து, அதை உடனடியாகச் சரிசெய்ய இது மிகவும் உதவியாக இருந்தது.

 

எதிர்கால வெற்றியாளர்களுக்கு நான் சொல்லும் பாடம்:

 

நான் SET தேர்விலும் வெற்றி பெற்றேன், இப்போது PG TRB-யிலும் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால், ஒரு விஷயத்தை நான் நேர்மையாக ஒப்புக் கொள்கிறேன். பயிற்சியின் போது நான் சில நேரங்களில் டெஸ்ட் பிராக்டிஸில் (Test Practice) சற்று சுணக்கமாக இருந்தேன். அதனால் எனக்குப் பிடித்த இடத்திற்குப் பதில் சற்று தொலைவில் பணி கிடைத்துள்ளது.

 

எனவே, என்னைப் பின்பற்றி வரும் தேர்வர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை:

 

“எந்தச் சூழலிலும் டெஸ்ட் பிராக்டிஸை விட்டுவிடாதீர்கள். முழு அர்ப்பணிப்போடு தயாராகுங்கள். அப்போதுதான் State rank + general trun-ல் இடம் பெற்று உங்கள் வீட்டிற்கு அருகிலேயே அரசுப் பணியைப் பெற முடியும்!” என்னைச் செதுக்கிய Professor Academy-யிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 

உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்க: 

 

நீங்கள் அரசு ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தால், சரியான வழிகாட்டுதலுக்கு Professor Academy-யை அணுகுங்கள். எங்களது Live classes + recorded classes, மெண்டார்ஷிப் மற்றும் தொடர் தேர்வுகள் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!