தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக வேண்டும் என்ற கனவுடன் காத்திருக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
நமது Professor Academy, வருங்கால ஆசிரியர்களின் வெற்றிக்காக எப்போதும் துணையாக நிற்கிறது. அந்த வகையில், தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் (New Syllabus) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட UG TRB Books-களை மாணவரக்ளுக்கு தாமதம் இன்றி கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆம் வருகின்ற மார்ச் 15-ம் தேதி மாணவர்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய மாவட்டங்களில் Professor Academy-யின் நேரடி UG TRB Admission Point மற்றும் Printed Book Hub-களை ஏற்படுத்தியுள்ளோம் .
எந்தெந்த பாடங்களுக்கு புத்தகங்கள் தயார்?
தற்போது கீழ்க்கண்ட நான்கு முக்கியப் பாட புத்தகங்கள் மற்றும் வினா வங்கிகள் (Main subject books + question bank ) விநியோகிக்கப்பட உள்ளன:
அதன் விவரம்
புத்தகங்களை எங்கே, எப்போது பெறலாம்?
மாணவர்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் 7 மாவட்டங்களில் நேரடி விநியோக மையங்களை (Book Hubs) ஏற்படுத்தியுள்ளோம்.
குறிப்பு : நீங்கள் எங்களை எளிதில் அடையாளம் காண ஏதுவாக, அனைத்து மையங்களிலும் எங்களது அகாடமி ஸ்டாண்டீ (Professor Academy Standee) வைக்கப்பட்டிருக்கும். எனவே, நீங்கள் சிரமமின்றி எங்களைக் கண்டறிந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
7 Book Hubs விவரங்கள்
தேதி: மார்ச் 15
மார்ச் 15-ம் தேதி வ்அந்தந்த மாவட்ட மையங்களுக்கு நேரில் வந்து நீங்கள் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம்.
மேலும் புத்தகங்களை உங்கள் கையில் வாங்கும்போது அவற்றை முழுமையாகப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
ஒருவேளை ஏதேனும் புத்தகங்கள் சேதமடைந்திருந்தாலோ (Damaged Condition) அல்லது அச்சுப் பிழைகள் இருந்தாலோ, எவ்வித தாமதமும் இன்றி அந்த இடத்திலேயே நீங்கள் புதிய புத்தகத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இதன் மூலம் உங்களுக்கு Payment Charges + Courier charges + Delivery time save செய்யப்படும் .
புதிய வகுப்பு அறிவிப்பு (New Batch Admission):
புத்தக விநியோகம் ஒருபுறம் இருக்க, மார்ச் 10-ஆம் தேதி முதல் நமது அகாடமியில் புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் (New Batch) தொடங்கி உள்ளன. புத்தகங்களை வாங்க வரும் போதே, இந்த புதிய வகுப்புகளுக்கான Admission-களையும் நீங்கள் நேரடியாவே செய்து கொள்ளலாம்.
நேரடி Admission மூலம் உங்களுக்கு Fees Payment charges + Book Courier charges + Delivery time Rs.900 வரை save செய்யப்படும்.
தற்போது புத்தகங்கள் நமது அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கும், விநியோக மையங்களில் (Book Hubs) புதிய அட்மிஷன் போடுபவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகின்றன.
மற்றவர்கள் ஏப்ரல் மாதம் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நிச்சயமாக உங்களை நாங்கள் ஏமாற்ற மாட்டோம்!
வரும் மாதங்களில் நமது மாணவர்கள் அல்லாத மற்றவர்களுக்கும் புத்தகங்கள் தாராளமாகக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
Note:
புத்தகங்களை நீங்களே நேரில் வந்துதான் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உங்களுக்குப் பதிலாக உங்கள் குடும்ப உறுப்பினர்களையோ அல்லது நண்பர்களையோ அனுப்பி தாராளமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் நண்பர் ஒருவரே மற்ற நண்பர்களுக்கும் சேர்த்து (3 அல்லது 4 நபர்களுக்கு) புத்தகங்களை வாங்கிக்கொள்ளவும் அனுமதி உண்டு.
உங்களுக்குப் பதிலாக வேறொருவர் புத்தகங்களைச் சேகரிக்க வரும்போது, கீழே உள்ளவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்:
- Location Screenshot: உங்கள் மாவட்டத்திற்கான இடத்தின் விவரம் வீடியோவில் வரும்போது, அதனை ஒரு Screenshot எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்புங்கள். இது அவர்கள் மையத்தை எளிதில் கண்டறிய உதவும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்: அகாடமியில் நீங்கள் பதிவு செய்துள்ள (Registered) மொபைல் எண்ணை அவர்களிடம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
- பாடம் (Subject): நீங்கள் எந்த Subject சேர்ந்தவர் என்ற தகவலைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
- மீதமுள்ள கட்டணம் (Balance Payment): ஒருவேளை நீங்கள் தவணை முறையில் (Installment) பணம் செலுத்த வேண்டி இருந்தால், அதற்கான தொகையை (Cash) அவர்களிடம் கொடுத்து அனுப்புங்கள்.
அவர்கள் மையத்திற்கு வந்தவுடன், பாதுகாப்பு கருதி உங்கள் Mobile எண்ணிற்கு நாங்கள் அழைப்போம். உங்களிடம் உறுதிப்படுத்திய பிறகே புத்தகங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்
மேலும் தயவுசெய்து தேவையான கட்டணத்தைப் பணமாக (Cash) கையோடு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். விநியோக மையங்களில் GPay அல்லது PhonePe போன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற வசதிகள் இருக்காது.
அனைத்து மாவட்ட மையங்களிலும் பணமாக (Cash) வழங்குவது உங்களுக்கும் எங்களுக்கும் பணப்பரிமாற்றத்தை எளிதாக்கும்.
இதன் மூலம் தேவையற்ற ஆன்லைன் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்கலாம் மற்றும் உங்கள் அட்மிஷன் விவரங்களைச் சரிபார்ப்பதும் எங்களுக்கு மிக எளிதாக இருக்கும்
ஏன் Professor Academy புத்தகங்கள் தனித்துவமானவை?
- புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் (New Syllabus Based): தமிழக அரசு அறிவித்துள்ள சமீபத்திய பாடத்திட்ட மாற்றங்களுக்கு ஏற்ப இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
- நிபுணர்களின் வழிகாட்டுதல்: ஒரு பாடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு, தேர்விற்குத் தேவையான முக்கியப் பகுதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
- லேடெக் (LaTeX) தட்டச்சு: அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் உள்ள சிக்கலான சமன்பாடுகள், குறியீடுகள் எவ்விதப் பிழையுமின்றித் தெளிவாகப் புரியும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
பாடவாரியான புத்தக விவரங்கள்
தற்போது நான்கு முக்கியப் பாடங்களுக்குப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன:
UG TRB English
ஆங்கிலப் பாடத்தைப் பொறுத்தவரை, மொத்தம் 11 புத்தகங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு யூனிட்டிற்கும் தனித்தனி புத்தகங்கள் மற்றும் ஒரு விரிவான வினா வங்கி (Question Bank) அடங்கும்.
UG TRB Mathematics, Physics & Chemistry
கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் சமன்பாடுகள் மற்றும் வரைபடங்கள் அதிகம் என்பதால், மாணவர்கள் உடனடியாகப் படிக்கத் தொடங்குவதற்காக முதல் செட் (First Set) புத்தகங்கள் இப்போது வழங்கப்படுகின்றன. நீங்கள் இந்தப் புத்தகங்களைப் படித்து முடிப்பதற்குள், அடுத்த செட் புத்தகங்கள் உங்கள் கைக்கு வந்து சேரும்.
7 மாவட்டங்களில் நேரடி விநியோகம்: அட்டவணை மற்றும் இடங்கள்
மாணவர்கள் கொரியர் சேவையை எதிர்பார்த்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காக, மார்ச் 15-ம் தேதி தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் நேரடி விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1. சென்னை (Professor Academy முதன்மை அலுவலகம்)
நீங்கள் சென்னையில் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், எங்களது பிரதான அலுவலகத்திற்கு (Main Office) நேரடியாக வரலாம். இது நமது தலைமை அலுவலகம் என்பதால், மாணவர்கள் அனைத்து நாட்களிலும் தங்களுக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
முகவரி: 14, வெஸ்ட் அவென்யூ, டெய்லர் எஸ்டேட், கோடம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600024.
அமைவிடம்: கோடம்பாக்கம் ரயில்வே நிலையத்திலிருந்து வெறும் 2-3 நிமிட நடைப்பயண தூரம்.
நேரம்: சென்னையில் வாரம் முழுவதும் (அனைத்து நாட்களிலும்) – காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை புத்தகங்கள் கிடைக்கும்.
தொடர்பு எண்: 7010531906
2. மதுரை
அமைவிடம் மற்றும் முகவரி:
இடம்: நியூ எவரெஸ்ட் புக் சென்டர் (New Everest Book Center).
அடையாளம் (Landmark): மதுரையின் புகழ்பெற்ற தங்கரீகல் தியேட்டருக்கு (Thanga Regal Theatre) அப்படியே எதிர்புறம் இந்த புத்தக நிலையம் அமைந்துள்ளது.
எப்படிச் சென்றடைவது?
இந்த மையம் மதுரையின் மிக முக்கியமான போக்குவரத்து மையங்களுக்கு
மிக அருகிலேயே உள்ளது:
- மதுரை ஜங்ஷன் (ரயில் நிலையம்): ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரம்தான்.
- பெரியார் பேருந்து நிலையம்: பஸ் ஸ்டாண்டிலிருந்து வெறும் 2 நிமிடம் நடந்தே இந்த இடத்தை அடைந்துவிடலாம்.
நீங்கள் ரயில் மூலம் வந்தாலும் சரி, பேருந்து மூலம் வந்தாலும் சரி, மிக எளிதாக 2 நிமிட நடைப்பயணத்தில் புத்தகங்களை வந்து பெற்றுக்கொள்ள முடியும்.
தேதி: மார்ச் 15
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.
Madurai Location: Opposite to Sarvodhaya Ilakiya Pannai https://maps.app.goo.gl/xyKktwfEpAhctV5T6
Phone no: 9080979159
3. சேலம்
அமைவிடம் மற்றும் லேண்ட்மார்க் (Landmarks):
இடம்: ஆர். கே. ஹோட்டல் (R.K. Hotels)
அடையாளம்: பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles) ஷோரூமிற்கு அப்படியே பின்புறம் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.
கூடுதல் அடையாளம்: லாலா ஸ்வீட்ஸ் (Lala Sweets) கடைக்கு அடுத்ததாகவே ஆர். கே. ஹோட்டலை நீங்கள் காணலாம்.
எப்படிச் சென்றடைவது?
பை ரோட்ஸ் (Five Roads) பஸ் ஸ்டாப்: நீங்கள் இங்கே இறங்கினால், ஒரு நிமிட நடைப்பயணத்திலேயே மையத்தை அடைந்துவிடலாம்.
சேலம் நியூ பஸ் ஸ்டாண்ட்: இங்கிருந்து வருபவர்கள் ஒரு ஸ்டாப் பேருந்தில் ஏறி இறங்கலாம் அல்லது 5 நிமிடம் நடந்தே வந்துவிடலாம்.
முக்கிய விவரங்கள்:
தேதி: மார்ச் 15
நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.
Salem Location: https://www.google.com/travel/hotels/s/xzbrPQH3jrHQkxHC7
Phone no: 8489717510
4. விழுப்புரம்
உதயம் கோச்சிங் சென்டர் (புத்தக விநியோக மையம்)
விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நமது UG TRB மாணவர்கள், மார்ச் 15-ஆம் தேதி அன்று தங்களது புத்தகங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
அமைவிடம் மற்றும் முகவரி:
இடம்: உதயம் கோச்சிங் சென்டர் (Udhayam Coaching Centre), தனலட்சுமி நகர், சாய் சமிதி.
தேதி: மார்ச் 15
நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.
எளிதாகச் சென்றடைவது எப்படி? (Landmarks):
சிக்னல் பஸ் ஸ்டாப்: நீங்கள் இங்கே இறங்கினால், வெறும் 2 முதல் 3 நிமிடங்களில் நடந்தே மையத்தை அடைந்துவிடலாம்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் (New Bus Stand): பேருந்து நிலையத்திலிருந்து நடந்து வந்தால் சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.
முக்கிய அடையாளங்கள்: புகழ்பெற்ற வுட்லஸ் ஹோட்டல் (Woodlands Hotel) மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் (Aswin Sweets) ஆகிய இரண்டிற்கும் நேர் எதிரே உள்ள தெருவில் இந்த மையம் அமைந்துள்ளது.
நேரம் முக்கியம்: மற்ற இடங்களைப் போல காலை 10 மணிக்குத் தொடங்காமல், விழுப்புரத்தில் காலை 11 மணிக்குத்தான் விநியோகம் தொடங்கும் என்பதை நினைவில் கொள்க.
தவணைத் தொகை: நீங்கள் Installment-ல் fees Payment செலுத்த வேண்டியிருந்தால், அதைச் சரிபார்க்க ஏதுவாக ரொக்கமாக (Cash) கொண்டு வரவும்.
விழுப்புரம் Book Hub Place Google Map லொகேஷன்: https://maps.app.goo.gl/pcPzNdeYM6E23ewb9
போன் நம்பர் : 9150567983
5. திருச்சி
இடம்: திருச்சி பழைய பஸ் ஸ்டாண்டு (Old Bus Stand) அருகில்.
அடையாளம்: பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் 100 – 200 மீட்டர் தொலைவிலுள்ள பர்கர் கிங் (Burger King) உணவகத்திற்கு அப்படியே எதிர்ப்புறம் நமது விநியோக மையம் அமைந்துள்ளது.
ஜங்ஷன் ஏரியாவிலிருந்து: நீங்கள் திருச்சி சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் (Junction) பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்றால், அங்கிருந்து வெறும் 2 நிமிட நடைப்பயணத்திலேயே இந்த இடத்தை அடைந்துவிடலாம்.
முக்கிய விவரங்கள்:
தேதி: மார்ச் 15
நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.
திருச்சி Book Hub Place Google Map லொகேஷன் – https://maps.app.goo.gl/4Z3GS3MnqeKp39xe8
போன் நம்பர் : 9150567982
6. திருநெல்வேலி
எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (புத்தக விநியோக மையம்) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நமது மாணவர்கள் புத்தகங்களை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில், விநியோக மையம் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே அமைந்துள்ளது.
அமைவிடம் மற்றும் அடையாளங்கள் (Landmarks):
இடம்: கடை எண் 14. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் (MGR New Bus Stand).
அடையாளம்: டவுன் பஸ்கள் (Town Bus Stop) நிற்கும் இடத்திற்கு மிக அருகில் உள்ள ‘ஸ்பீட் ஜெராக்ஸ்’ (Speed Xerox) கடைக்கு அப்படியே அடுத்த கடை.
முக்கிய விவரங்கள்:
தேதி: மார்ச் 15
நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.
திருநெல்வேலி Book Hub Place Google Map லொகேஷன் – https://maps.app.goo.gl/ZpEvMHgic9qzj5vC6
போன் நம்பர் : 9080979208
7. தஞ்சாவூர்
அமைவிடம் : தஞ்சை பெரிய கோவில் எதிரே உள்ள கார் பார்க்கிங் பகுதி
தேதி: மார்ச் 15
நேரம்: மாலை 4:00 PM – 7:00 PM
Phone no: 9150567982
மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
புத்தகங்களை வாங்க வருவதற்கு முன் கீழ்க்கண்டவற்றைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்:
- கையில் பணம் (Cash only): பல இடங்களில் ஜி-பே (G-Pay) அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் சரிபார்ப்பதில் தாமதம் ஏற்படலாம். எனவே, அட்மிஷன் மற்றும் Balance தொகையைப் பணமாக (Cash) கொண்டு வருவது சிறந்தது. மேலும் இதன் மூலம் உங்களுக்கு Payment Charges + Courier charges + Delivery time save செய்யப்படும்.
- தவணைத் தொகை: நீங்கள் Installment-ல் fees Payment செலுத்த வேண்டியிருந்தால், அதைச் சரிபார்க்க ஏதுவாக ரொக்கமாக (Cash) கொண்டு வரவும்.
- பை (Carry Bag): புத்தகங்களை எடுத்துச் செல்லத் தேவையான பைகளை நீங்களே கொண்டு வரவும்.
- பதிவு விவரங்கள்: உங்கள் சார்பாக நண்பர்கள் அல்லது உறவினர்கள் வரப்போகிறார்கள் என்றால், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் பாட விவரங்களை அவர்களிடம் கொடுத்து அனுப்பவும்.
- New Enrollment: புதிய அட்மிஷன் போட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தகவலைப் பகிருங்கள். அவர்கள் அங்கேயே சேர்ந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
Important Note :
கூகுள் பார்ம் (Google Form): நீங்கள் எந்த மாவட்ட மையத்திற்கு வரப்போகிறீர்கள் என்ற விவரத்தை இந்த https://forms.gle/BRSf1BuLYr8LFNz88 கூகுள் பார்மில் பூர்த்தி செய்யவும். இது தேவையான அளவு புத்தகங்களை அங்கு கொண்டு வர எங்களுக்கு உதவும்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!
புத்தக விநியோகம், அட்மிஷன் அல்லது பிற தகவல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களது அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
உதவி எண்: 7654665466, 9962828517
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
1. நான் Academy Student என்றால் என்ன விவரங்களை கொண்டு வர வேண்டும்?
அகாடமியில் பதிவு செய்த Registered Mobile Number மற்றும் உங்களிடம் Receipt இருந்தால் கொண்டு வர வேண்டும்
2. நான் நேரில் வர முடியாவிட்டால், என் உறவினர் / நண்பர்கள் மூலம் புத்தகங்களை பெற்றுக்கொள்ள முடியுமா?
ஆம். உங்கள் சார்பாக உறவினர் அல்லது நண்பர்கள் புத்தகங்களை பெறலாம். அவர்கள் வரும்போது கீழ்க்கண்ட விவரங்களை வழங்க வேண்டும்:
- Location Screenshot: உங்கள் மாவட்டத்திற்கான Location விவரம் வீடியோவில் வரும்போது அதனை Screenshot எடுத்து அவர்களிடம் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் மையத்தை எளிதில் கண்டறிய முடியும்.
- Registered Mobile Number: அகாடமியில் பதிவு செய்த மொபைல் எண்ணை அவர்களிடம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
Subject Details: நீங்கள் சேர்ந்துள்ள Subject என்ன என்பதைக் தெளிவாக தெரிவிக்க வேண்டும். - Balance Payment: நீங்கள் இன்னும் Installment தொகை செலுத்த வேண்டியிருந்தால், அதற்கான Cash தொகையை அவர்களிடம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
3. Admission Point-ல் அனைத்து Courses-க்கும் Admission செய்ய முடியுமா?
ஆம். Admission Point-ல் அனைத்து Courses-க்கும் Admission செய்யலாம். அங்கு உங்களுக்கு Receipt வழங்கப்படும் மற்றும் அடுத்த நாளிலிருந்து Course Access App-ல் செயல்படுத்தப்படும்.
4. நான் முழு Course Fee-யை Online-ல் கட்டினால், புத்தகங்கள் கிடைக்குமா?
ஆம். நீங்கள் Online-ல் முழு Course Fee கட்டினால், முதல் Set புத்தகங்கள் வழங்கப்படும்.
இரண்டாவது Set புத்தகங்களுக்கான Update பின்னர் வழங்கப்படும்.
5. நான் இரண்டாவது Installment கட்டினால், புத்தகங்கள் கிடைக்குமா?
ஆம். நீங்கள் இரண்டாவது Installment கட்டினால், முதல் Set புத்தகங்கள் மட்டும் வழங்கப்படும்.
6. மாவட்ட மையங்களுக்கு வர முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்காகத் தனி கொரியர் வசதி உண்டு. அதற்கான கூகுள் பார்மை பூர்த்தி செய்து, கொரியர் கட்டணம் செலுத்தினால் புத்தகங்கள் உங்கள் இல்லம் தேடி வரும். இது பற்றிய விவரங்கள் பின்னர் website-ல் update செய்யப்படும்.
7. புத்தகங்களை Courier மூலம் எப்போது அனுப்பத் தொடங்குவீர்கள்?
புத்தகங்களை 18 மார்ச் 2026 முதல் Courier மூலம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
8. Courier Charges என்ன?
- தமிழ்நாட்டிற்குள்: ₹300/-
- இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு: ₹600/-
9. நான் ஏற்கனவே Academy-யில் வேறு Course படித்து கொண்டிருந்தாலும், UG TRB புத்தகங்களை Book Hub-ல் பெற முடியுமா?
இல்லை. மற்ற Course படிக்கும் நமது Academy Students மற்றும் Academy அல்லாத மாணவர்கள் (Non-Academy Students) ஆகியோருக்கு UG TRB புத்தகங்கள் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும்.
10. நான் ஏற்கனவே Online-ல் ₹6000 First Installment கட்டியுள்ளேன். இப்போது Second Installment மட்டும் கட்டலாமா அல்லது Full Payment கட்டலாமா?
ஆம். நீங்கள் Second Installment மட்டும் கட்டினால், முதல் Set புத்தகங்கள் மட்டும் வழங்கப்படும்.
நீங்கள் Full Payment கட்டினால், மீதமுள்ள புத்தகங்களும் பின்னர் வழங்கப்படும்.
குறிப்பு: Installment Payment Update App-ல் reflect ஆக 1 நாள் வரை ஆகலாம்.
11. நான் Book Hub-ல் Payment செய்தால் என்ன Proof கிடைக்கும்?
ஆம். நீங்கள் Book Hub-ல் Payment செய்தால் உடனே Receipt வழங்கப்படும்.
அந்த Payment விவரம் அடுத்த நாளில் App-ல் Update செய்யப்படும்.