3 முறை CV வரை சென்று நழுவிய வெற்றி! 4-வது முறை ‘Professor Academy Coaching-ஆல்’ அரசு ஆசிரியர் ஆனேன்!

வணக்கம் நண்பர்களே, நான் Viji 

இன்று ஸ்ரீபெரும்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (GHSS- Sriperumbudur) ஆசிரியையாகப் பணியில் சேர்ந்துள்ளேன். எனது இந்த வெற்றிப் பயணம் அத்தனை எளிதானது அல்ல.  மூன்று முறை வெற்றிக் கோட்டின் மிக அருகில் சென்று, அதைத் தொட முடியாமல் திரும்பியவன் நான்.

தோல்வியின் விளிம்பில் நின்ற தருணங்கள்!

முதல் முறை: 

பாலிடெக்னிக் தேர்வு – CV (சான்றிதழ் சரிபார்ப்பு) வரை சென்றேன், ஆனால் பணி கிடைக்கவில்லை.

 

இரண்டாம் முறை: 

UG TRB – மீண்டும் CV வரை சென்று ஏமாற்றம்.

 

மூன்றாம் முறை: 

PG TRB – இதிலும் CV வரை சென்றும் இறுதிப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. மூன்று முறை வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் நழுவியபோது நான் உடைந்து போனேன்.  ஆனால், இந்த 4-வது முறை Professor Academy Coaching-இல் சேர்ந்தேன் – அதன் பரிசாக வெற்றி என் கைகளில் உள்ளது.

 

என்னைச் செதுக்கிய குருநாதர்கள்!

“தங்கப்பதக்கம் என்று தடுமாறும் போதெல்லாம், என்னைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்திய தமிழ் ஆசிரியர், ஆங்கிலம் என்றாலே அலற வேண்டாம் என்று அரவணைத்த ஆங்கில ஆசிரியர், வேதியியல் என்றாலே பலருக்குப் பீதி, ஆனால் அதையும் எளிமையாகச் சொல்லித் தருவோம் எனத் தேற்றிய Professor academy Chemistry ஆசிரியர்கள்…” – தான் என் வெற்றிக்கான அஸ்திவாரம்.

 

இந்த Academy -ல் ஆசிரியர்களைப் பற்றி நான் ஒரு புது விளக்கத்தைக் கற்றுக்கொண்டேன்: “Teacher மற்றும் Torture ஆகிய இரண்டு வார்த்தைகளையுமே எடுத்துக்கொள்ளுங்கள்.

 

இந்த இரண்டிலுமே கடைசியில் இருக்கும் ‘ER’ என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டால், நமக்குக் கிடைப்பது ‘TEACH’ மற்றும் ‘TORCH’.

இதன் அர்த்தம் என்னவென்றால், ஒவ்வொரு TEACH (கற்பித்தல்) என்பதற்குள்ளும் ஒரு TORCH (ஒளி/வழிகாட்டி) ஒளிந்துகொண்டிருக்கிறது. நம்மைச் செதுக்கும்போது அவர்கள் கொடுக்கும் அந்தச் சிறு ‘டார்ச்சர்’ (கடுமையான பயிற்சி), உண்மையில் நம் வாழ்வின் இருளைப் போக்கும் ஒளியாக மாறுகிறது. அதனால்தான் ஆசிரியர்கள் நமது வெற்றிக்கான காலடித் தடங்களாக (Footprints) இருக்கிறார்கள்!”

 

இதனாலேயே Professor Academy-ன்  வழித்தடங்களை பின்பற்றி நடந்த நம் எல்லோருக்கும் இன்று வெற்றி என்ற கனி கைகளில் உள்ளது   

 

வெற்றிக்குக் காரணமான ‘CALM’ சூத்திரம்!

அகாடமியில் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் CALM. இதற்கு அமைதி என்று மட்டும் பொருளல்ல;

 

  • C – Creativity (படைப்பாற்றல்)
  • A – Attitude (நேர்மறையான அணுகுமுறை)
  • L – Leadership (தலைமைப்பண்பு)
  • M – Motivation (ஊக்கம்)

 

இந்த நான்கு பண்புகளும் என்னிடம் இருந்ததால்தான், இன்று நானும் என் அகாடமி நண்பர்கள் பலரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக எங்களது கனவை நனவாக்கியுள்ளோம். எங்களது மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்த Professor Academy-க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!

 

உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்க: 

நீங்கள் அரசு ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தால், சரியான வழிகாட்டுதலுக்கு Professor Academy-யை அணுகுங்கள். எங்களது Live classes + recorded classes, மெண்டார்ஷிப் மற்றும் தொடர் தேர்வுகள் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!