Special TET 2026 State-Level Model Exam Today at 4:00 PM!

UGC NET Statistics Model Exam 2026 Today at 5:00 PM!

12 ஆண்டுகாலத் தனியார் பள்ளி பணி… 4 தோல்விகள்… 5-வது முயற்சியில் அரசு ஆசிரியை! என் வெற்றிப் பயணம்!

TRB Botany Achiever - Ayyapan R

வணக்கம் நண்பர்களே, நான் ஐயப்பன்

இன்று நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (GHSS – Keelaiyur) முதுகலை ஆசிரியராகப் ( PG Assistant – Botany ) பணியில் சேர்ந்துள்ளேன். என்னுடைய இந்த வெற்றிப் பயணம், ஒரு சாதாரண ஆசிரியைப் பணியைத் தேடும் பயணமல்ல; இது விடாமுயற்சியின் உச்சம்!

12 ஆண்டுகள்… ஓய்வில்லாத உழைப்பு!

கடந்த 12 ஆண்டுகளாகத் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்தேன். ஓய்வு நேரமே இல்லாமல் உழைத்தேன். அரசுப் பணி கனவோடு 5 முறை தேர்வுகளை எழுதினேன்.  ஒருமுறை சான்றிதழ் சரிபார்ப்பு (CV) வரை சென்று தோல்வியுற்ற போது, என் மனது உடைந்து போனது. “ஏன் என்னால் வெற்றி பெற முடியவில்லை?” என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அந்தத் தோல்விதான் என்னைச் சிந்திக்க வைத்தது.

 

என்னை மாற்றிய Professor Academy

அந்தச் சமயத்தில்தான், Professor Academy-யின் உயிரியல் (Botany) PG TRB இலவச டெமோ வகுப்புகளைக் கவனித்தேன். அந்த வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமாகவும், ஆழமாகவும் இருந்தன. NEET பயிற்சி அளிக்கும் வேலையைத் துறந்துவிட்டு, முழுநேரமாகப் படிக்க முடிவெடுத்து அகாடமியில் இணைந்தேன். அதுவே என் வாழ்வின் மிகச் சிறந்த முடிவு!

 

வெற்றிக்கு வழிவகுத்த அகாடமியின் சிறப்பம்சங்கள்:

நான் வெற்றி பெற்றதற்கு அகாடமி வழங்கிய கீழ்க்கண்ட முறைகள் மிக முக்கியக் காரணமாக அமைந்தன:

 

லீடர் போர்டு (Leaderboard) உந்துதல்: 

ஒவவொரு தேர்வுக்கும் பிறகு அகாடமி வெளியிடும் ‘லீடர் போர்டு’ என் வெற்றியின் மைல்கல்.  என் பெயர் அதில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே நான் அதிகாலை முதல் இரவு வரை படித்தேன்.  அந்த ஆரோக்கியமான போட்டி மனப்பான்மைதான் என்னை முதல் இடத்திற்குத் தள்ளியது.

 

தொடர் கண்காணிப்பு: 

ஆசிரியர்களும், Coordinator-களும் வாரந்தோறும் எனது படிப்பு நிலையை (Preparation Status) விசாரிப்பார்கள். அந்தத் தொடர் வழிகாட்டுதல் (Complete Guidance) என்னை ஒரு நிமிடம் கூட திசைமாற விடவில்லை.

 

தோல்வியைத் தழுவிய நண்பர்களுக்கு…

“12 ஆண்டுகள் உழைத்தேன், 4 முறை தோற்றேன், ஆனால் விடவில்லை!” 5-வது முறை நான் அரசு ஆசிரியராக உருவெடுத்துள்ளேன்.  நீங்கள் படிக்கும் முறை மாறினால், வெற்றியும் மாறும். சரியான வழிகாட்டியும், விடாமுயற்சியும் இருந்தால் எந்தக் கடினமான தேர்வும் உங்களுக்கு எளிதுதான்.

 

எனது இந்த வெற்றிக்குத் துணையாக இருந்த எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் என்னைச் செதுக்கிய Professor Academy-க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 

நீங்களும் ஒரு வெற்றியாளராக மாற விரும்பினால், இன்றே professor academy -யுடன் இணையுங்கள்!

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!