தோல்விக்கு இடமில்லை! Last time 1 Mark-ல் மிஸ் ஆகி இன்று TRB-ல் State 19th Rank! Petshiya Mary A Cs

TRB Computer Science Acheiver - Petshiya Mary A

 

 

 

 

வணக்கம்! நான் Petshiya Mary A 

 

இன்று என் சொந்த மாவட்டமான கள்ளக்குறிச்சியிலேயே, 

 

ரிஷிவந்தியம் அரசுப் பள்ளியில் முதுகலை கணினி ஆசிரியராகப் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. 

 

இந்த நிலையை அடைய நான் கடந்து வந்த பாதை, வலிகளும் நம்பிக்கையும் நிறைந்தது.

 

 

 

 

வலியில் முடிந்த முதல் முயற்சி!

 

இது என்னுடைய இரண்டாவது முயற்சி. முதல் முறை தேர்வு எழுதியபோது, 

 

சான்றிதழ் சரிபார்ப்பு (CV) வரை சென்று வெறும் ஒரே ஒரு மதிப்பெண்ணில் வாய்ப்பை இழந்தேன். 

 

அந்தத் தருணத்தில் நான் அடைந்த வேதனை சொல்லிலடங்காது. 

 

“இவ்வளவு தூரம் வந்துவிட்டு இப்படித் தோற்றுவிட்டோமே” என்று மனம் வாடியது. 

 

உங்களில் பலரும் இன்று அதே வலியை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். 

 

உங்களுக்காக நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்: 

 

 

 

“ஒருபோதும் ஓட்டத்தை நிறுத்திவிடாதீர்கள்!”

 

இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஒவ்வொரு 5 நிமிடமும் உங்களுடையது!

 

வெற்றி என்பது நீண்ட நேரப் படிப்பில் மட்டும் இல்லை, அது உங்கள் தொடர் முயற்சியில் (Consistency) இருக்கிறது. 

 

ஒரு இல்லத்தரசியாக, குடும்பம், குழந்தைகள் எனப் பல பொறுப்புகளுக்கு நடுவேதான் நான் படித்தேன்.

 

 

 

நேரத்தை நிர்வகித்தல்: 

 

“ஒரு மணி நேரம் கிடைத்தால் தான் படிப்பேன்” என்று காத்திருக்காதீர்கள். 

 

உங்கள் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் அந்தச் சிறு 5 நிமிடங்களைக் கூடப் படிப்பிற்காகப் பயன்படுத்துங்கள்.

 

 

இடைவிடாத ஓட்டம்: 

 

நீங்கள் ஏற்கனவே இலக்கின் விளிம்பில் (Edge Point) நிற்கிறீர்கள். 

 

இப்போது ஓட்டத்தை நிறுத்தினால், இதுவரை நீங்கள் போட்ட உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும்.

 

 

Consistency – Consistency- Consistency: 

 

அதுதான் வெற்றிக்கான தாரக மந்திரம். 

 

நான் என் குடும்பச் சூழலைச் சொல்லி படிப்பைக் கைவிட்டிருந்தால், 

 

இன்று மாநில அளவில் 19-வது ரேங்க் எடுத்து உங்கள் முன்னால் நின்றிருக்க முடியாது.

 

இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஒவ்வொரு அடியும் முக்கியம். 

 

உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள். 

 

ஒவ்வொரு 5 நிமிடத்தையும் உங்களுக்கானதாக மாற்றிக்கொள்ளுங்கள். 

 

அந்தச் சிறு சிறு முன்னேற்றங்கள் தான் உங்களை ஒருநாள் மாபெரும் வெற்றியாளராக மாற்றும்.

 

எனது கனவை நனவாக்க உறுதுணையாக இருந்த Professor Academy குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

 

 

 

உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்க: 

 

நீங்கள் அரசு ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தால், 

 

சரியான வழிகாட்டுதலுக்கு Professor Academy-யை அணுகுங்கள். 

 

எங்களது Live classes + recorded classes, Mentorship மற்றும் Test series உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.

 

 

 

 

 

 

தொடர்புக்கு: +91 7070701005 / 7070701009

 

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!