TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவது என்பது வெறும் எழுத்துத் தேர்வுடன் முடிந்துவிடுவதில்லை.
நீங்கள் தேர்வு செய்யும் பதவியைப் பொறுத்து, உங்களது உடல் தகுதி மற்றும் மருத்துவத் தகுதிகள் மிகத் துல்லியமாகப் பரிசோதிக்கப்படும்.
குறிப்பாக வனத்துறை பதவிகளுக்குக் கடுமையான விதிகள் உள்ளன.
இப்பதிவில், பொதுவான பதவிகள் மற்றும் வனத்துறை பதவிகளுக்கான உடல் தகுதித் தேவைகளை விரிவாகக் காண்போம்.
பொதுவான பதவிகளுக்கான தகுதிகள் (Junior Assistant, Typist, etc.)
இளநிலை உதவியாளர், தட்டச்சு போன்ற அலுவலகப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
உடல் தகுதிச் சான்றிதழ் (Physical Fitness Certificate)
நீங்கள் பணியில் சேரும் நேரத்தில் (Time of Joining), அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் பெற்ற உடல் தகுதிச் சான்றிதழை நியமன அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பார்வைத் திறன் (Visual Acuity):
விண்ணப்பதாரரின் பார்வைத் திறன் Standard III அல்லது அதற்கும் மேலான தரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
கண் பரிசோதனை:
பார்வைக் குறைபாடு இருப்பவர்கள், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தகுதியான கண் மருத்துவ நிபுணரிடம் (Eye Specialist) பெற்ற ‘Eye Fitness Certificate’ சமர்ப்பிக்க வேண்டும்.
வனத்துறை பதவிகளுக்கான உடல் தகுதிகள் (Forest Guard & Watcher)
வனக்காவலர் (Forest Guard), ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர், வனக் காப்பாளர் (Forest Watcher)
மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான வனக் காப்பாளர் பதவிகளுக்குக் கீழ்க்கண்ட குறைந்தபட்ச உடல் தகுதிகள் கட்டாயமாகும்:
Physical Standards (Height & Chest Measurement)
| Category | Height (cm) | Chest – Normal (cm) | Chest Expansion (cm) |
| Male | 163 | 79 (on full expiration) | 5 (on full inspiration) |
| Female & Third Gender | 150 | 74 (on full expiration) | 5 (on full inspiration) |
வனத்துறை பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பழங்குடியின (ST) விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதி:
வனத்துறை பதவிகளுக்கு (Forest Guard, Forest Watcher, etc.) விண்ணப்பிக்கும் பழங்குடியின (Scheduled Tribes) விண்ணப்பதாரர்கள்,
கீழ்க்கண்ட குறைந்தபட்ச உயரத்தை (Height) கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும்:
- ஆண் விண்ணப்பதாரர்கள்: 152 செ.மீ
- பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்: 145 செ.மீ
உடல் தகுதிச் சான்றிதழ் (Certificate of Physical Standards):
அரசு மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon) பதவிக்கு குறையாத நிலையில் உள்ள ஒரு மருத்துவ அலுவலரிடம் (Medical Officer) கீழ்க்கண்ட விவரங்கள் அடங்கிய சான்றிதழைப் பெற வேண்டும்.
இச்சான்றிதழ் தேர்வு அறிவிப்பு (Notification) வெளியான தேதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.
தேர்வாணையம் கோரும்போது இந்த ஆவணத்தைப் பதிவேற்றம் செய்யவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ வேண்டும்.
- உயரம் (Height): ….. செ.மீ
- மார்பளவு (Chest Measurement):
- (i) முழுமையாக மூச்சை உள்ளிழுத்த நிலையில்: ….. செ.மீ
- (ii) முழுமையாக மூச்சை வெளிவிட்ட நிலையில்: ….. செ.மீ
- (iii) வித்தியாசம் (விரிவடைதல்): ….. செ.மீ
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர்: பிரத்யேக பார்வைத் திறன்
வனக்காவலர் (Driving Licence) பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மிகக் கடுமையான பார்வைத்திறன் விதிகள் உள்ளன.
கண்ணாடி அணியாமல் (Without Glasses) கீழ்க்கண்ட தரநிலையைப் பெற்றிருக்க வேண்டும்:
| பார்வை வகை | வலது கண் (Right Eye) | இடது கண் (Left Eye) |
| தூரப்பார்வை (Distance Vision) | 6/6 | 6/6 |
| அண்மைப்பார்வை (Near Vision) | 0.5 (Snellen) | 0.5 (Snellen) |
முக்கிய தகுதியின்மை (Disqualification):
- நிறக்குருடு (Colour Blindness), கண் மெல்லிசை (Squint) அல்லது கண்களில் ஏதேனும் நோய் பாதிப்புகள் இருந்தால் தகுதியற்றவர் என அறிவிக்கப்படுவர்.
- Lasik / Laser Surgery: கண்களில் லேசர் அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க இயலாது.
உடல் தகுதிச் சான்றிதழ் பெறுவது எப்படி?
தேர்வு அறிவிப்பு (Notification) வெளியான தேதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ, அரசு மருத்துவமனையில் பணிபுரியும்
உதவி அறுவை சிகிச்சை நிபுணருக்கு (Assistant Surgeon) குறையாத நிலையில் உள்ள மருத்துவ அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
சான்றிதழில் இடம்பெற வேண்டிய விபரங்கள்:
- துல்லியமான உயரம் (செ.மீ-இல்).
- மார்பளவு (மூச்சை உள்ளிழுத்த மற்றும் வெளிவிட்ட நிலையில்).
- மார்பு விரிவடைதல் (குறைந்தது 5 செ.மீ இருக்க வேண்டும்).
மேற்கண்ட தகுதிகள் உங்களை விண்ணப்பிக்க வைக்கும்;
ஆனால் உங்கள் விடாமுயற்சி மட்டுமே உங்களை அரசு அதிகாரியாக்கும்!
மேலும் தகவல்களுக்கு எங்களது Professor Academy தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற TNPSC Group IV – VAO exam தகவல்களுக்கு எங்களது Professor Academy-யுடன் இணைந்து இருங்கள்.
Contact : +91 7550100920