Finally, TNPSC Group 1 Notification 2026 வெளியாகிவிட்டது!

TNPSC Group 1 Notification 2026

Deputy Collector, DSP போன்ற உயர்நிலை அரசு பணிகளில் சேர வேண்டும் என்று கனவு காணும் ஆயிரக்கணக்கான Aspirants-க்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.

TNPSC Combined Civil Services Examination – I (Group 1 Services) Notification 2026 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் Deputy Collector, DSP, Assistant Commissioner மற்றும் பல உயர்நிலை Group 1 பதவிகளுக்கு இப்போது நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

Online application June 30, 2026 முதல் July 29, 2026 வரை திறந்திருக்கும். Preliminary Examination September 6, 2026 அன்று நடைபெறும். இந்த blog-ல் vacancy details, eligibility, exam pattern, apply process ஆகிய அனைத்தையும் தெளிவாக பார்க்கலாம் .

ஒரே பார்வையில் முக்கிய தகவல்கள் :

விவரம்

தகவல்

Notification எண்

No. 05/2026 | Advertisement No. 736

மொத்த காலிப்பணியிடங்கள்

26 (Group 1) 

விண்ணப்பிக்கும் தொடக்கம்

June 30, 2026

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

July 29, 2026 (இரவு 11:59 மணி வரை)

Application Correction

August 2 – August 4, 2026

Preliminary Exam தேதி

September 6, 2026 (காலை 9:30 – 12:30)

சம்பளம்

₹56,100 – ₹2,05,700 / மாதம் (Pay Level 22)

அதிகாரப்பூர்வ Website

https://www.tnpsc.gov.in/

பதவிவாரியான காலிப்பணியிடங்கள் (Vacancy Details)

TNPSC Group 1 அறிவிப்பின்படி, தமிழக அரசின் மிக உயர்ந்த நிர்வாகப் பதவிகளுக்காக மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள விரிவான காலிப்பணியிட விவரங்கள் (Post-wise Vacancy Details) கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர்

காலிப்பணியிடங்கள்

Deputy Collector (துணை கலெக்டர்)

12

District Registrar (மாவட்ட பதிவாளர்)

8

Deputy Registrar of Co-operative Societies

3

Assistant Commissioner (Commercial Taxes)

2

Assistant Commissioner of Labour

1

மொத்தம் – Group 1 Services

26

யார் விண்ணப்பிக்கலாம்? – Eligibility Criteria

Group 1 என்பது graduate-level தேர்வு. எந்த recognized university-யிலும் Degree (Bachelor’s) பெற்றிருந்தால் போதும். Final year students-கூட விண்ணப்பிக்கலாம் , ஆனால் Main Exam registration-க்கு முன் degree certificate கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் SSLC வரை Tamil படித்திருக்க வேண்டியது அவசியம்.  

Age Limit (வயது வரம்பு) - As on July 1, 2026

Category

குறைந்தபட்ச வயது

அதிகபட்ச வயது

Others (General)

21 ஆண்டுகள்

34 ஆண்டுகள்

BC / MBC / DNC

21 ஆண்டுகள்

39 ஆண்டுகள்

SC / SC(A) / ST

21 ஆண்டுகள்

39 ஆண்டுகள்

PwD (Tamil Nadu)

21 ஆண்டுகள்

வயது வரம்பு இல்லை

Destitute Widows

21 ஆண்டுகள்

வயது வரம்பு இல்லை

தேர்வு முறை — எப்படி நடக்கும்? (Exam Pattern 2026)

நிலை 1: Preliminary Examination (Screening Test)

Prelims marks final merit-ல் count ஆகாதுஇது screening மட்டுமே.

Subject

Questions

Marks

Duration

General Studies (Degree Standard)

175 Questions

262.5 Marks

 

Aptitude & Mental Ability Test

25 Questions

37.5 Marks

 

TOTAL

200 MCQs

300 Marks

3 Hours (9:30 AM – 12:30 PM)

Note: Negative marking இல்லை! OMR-based தேர்வு. ஒவ்வொரு சரியான விடைக்கும் 1.5 marks.

நிலை 2: Main Written Examination (Descriptive)

Prelims-ல் qualify ஆன candidates (vacancies x 20 ratio) Mains-க்கு அழைக்கப்படுவார்கள். Mains Chennai-ல் மட்டுமே நடக்கும்.

Paper

பாடம்

தன்மை

Paper I

Tamil Eligibility Test

Qualifying only (min. 40% தேவை)

Paper II

General Studies – I

Merit-ல் count ஆகும்

Paper III

General Studies – II

Merit-ல் count ஆகும்

Paper IV

General Studies – III

Merit-ல் count ஆகும்

முக்கியம்: Paper I (Tamil) qualify ஆகவில்லை என்றால், Papers II, III, IV evaluate ஆகாது. எல்லா papers-லும் appear ஆவது கட்டாயம்.

நிலை 3: Interview / Oral Test

Mains-ல் qualify ஆன candidates interview-க்கு அழைக்கப்படுவார்கள். Final merit list = Mains marks + Interview marks.

விண்ணப்பிக்கும் முறை (Step-by-Step Guide)

Pro Tip: Last date-க்கு காத்திருக்காதீர்கள் – portal heavy traffic காரணமாக slow ஆகலாம். OTR இன்றே complete செய்யுங்கள் !

TNPSC-க்கு Professor Academy-யில் தயாராகுங்கள்!

TNPSC Group 1 Notification வெளியானது என்பது ஒரு important signal – Group 2, Group 2A, Group 4 / VAO  உள்ளிட்ட அனைத்து TNPSC தேர்வுகளுக்கும் இப்போதே solid foundation கட்டும் நேரம் இது. TNPSC-ன் General Studies syllabus Group 1 முதல் Group 4 வரை பெரும்பாலும் overlap ஆகும், எனவே இப்போது படிக்கத் தொடங்குவது எல்லா தேர்வுகளுக்கும் உதவும்.

TNPSC தேர்வுக்கான எங்கள் பயிற்சி வகுப்புகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions)

1. TNPSC Group 1 Notification 2026 எப்போது வெளியானது? விண்ணப்பிக்கக் கடைசி நாள் எப்போது?

ஜூன் 23, 2026 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification No. 05/2026) வெளியானது. இத்தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூலை 29, 2026 ஆகும்.

செப்டம்பர் 6, 2026 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை முதல்நிலைத் தேர்வு நடைபெறும். இது OMR தாள் அடிப்படையிலான கொள்குறி வகை (MCQ format) தேர்வாகும். இத்தேர்வில் தவறான பதில்களுக்குக் கழிவு மதிப்பெண்கள் (Negative marking) இல்லை.

முதன்மை எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டுமே (Center Code: 0101) நடத்தப்படும். இதற்கான துல்லியமான தேதிகள் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அறிவிக்கப்படும்.

1 ஜூலை 2026 அன்றைய நிலவரப்படி, அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு:

  • பொதுப் பிரிவு (General / Others): 34 வயது
  • BC / BCM / MBC / DNC: 39 வயது
  • SC / SC(A) / ST: 39 வயது

இவை அனைத்தும் தமிழக அரசின் ‘Pay Level 22’ பிரிவின் கீழ் வருவதால், அடிப்படை ஊதியம் ₹56,100 முதல் ₹2,05,700 வரை இருக்கும். இதனுடன் அரசு வழங்கும் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் மருத்துவச் சலுகைகளும் (Medical Benefits) கூடுதலாகக் கிடைக்கும்.

இந்த வாய்ப்பை இழக்காதீர்கள்!

TNPSC Group 1 என்பது ஆண்டுக்கொரு முறை வரும் opportunity. 26 vacancies-க்காக லட்சக்கணக்கான aspirants போட்டியிடுவார்கள் , ஆனால் சரியான preparation-உடன் நீங்கள் வெற்றி பெறலாம். Application last date July 29, 2026. OTR complete செய்து, இன்றே விண்ணப்பிக்கும் பயணத்தை தொடங்குங்கள்

                                                                                                                                   FREE YouTube Classes 

                                                       https://youtube.com/@professoracademytnpsc?si=empWoPwFQFr9KgZ- |

                                                                                                           Paid Course Enrollment — Contact Now

                                                                                              https://professoracademy.com/tnpsc-online-coaching/ |Group II/IIA &Group IV/VAO Courses 

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!