Food Safety Officer (உணவுப் பாதுகாப்பு அலுவலர்) Tamil Syllabus

food safety officer tamil syllabus

அலகு 1:இந்திய மற்றும் சர்வதேச உணவுச் சட்டங்கள் (ஒரு கண்ணோட்டம்)

அலகு 2: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI): பங்கு, பணிகள், முன்னெடுப்புகள் (பொதுப் புரிதல்)

TN MRB Food Safety Officer Syllabus 2026 – Download Tamil & English Syllabus

Get the TN MRB Food Safety Officer (FSO) Syllabus 2026 in Tamil and English. Explore subject-wise topics, understand key concepts, and download the syllabus PDF to plan your exam preparation effectively.

அலகு 3: இந்தியாவில் உணவுப் பாதுகாப்புச் சூழலமைப்பு

இந்தியாவில் உணவுப் பாதுகாப்பின் நிலை: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006, அதன் பின்னணி; உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறைகள் (FSSR), 2011: உரிமம் வழங்குதல், பதிவு செய்தல், அட்டவணை 4 (Schedule 4) தேவைகள், பொதிவு (packaging), முத்திரையிடல் (labelling) தேவைகளில் அண்மைக்கால முன்னேற்றங்கள், ஊட்டமருந்துப் பொருள்கள் (nutraceuticals), சிறப்பு உணவுமுறைப் பயன்பாட்டுக்கான உணவுகள் தொடர்பான ஒழுங்குமுறைகள், இயற்கை (organic) உணவு, குறிப்பிட்ட தரநிலைகள் நிர்ணயிக்கப்படாத உணவுகள் மற்றும் உணவுப் பொருட்களின் (ingredients) மூலக்கூறுகள் தொடர்பான விதிமுறைகள், மத்திய ஆலோசனைக் குழு, அறிவியல் குழு/வல்லுநர் குழுக்கள், உணவு இறக்குமதி அனுமதி அமைப்பு, அறிவிக்கப்பட்ட ஆய்வகங்கள், தீர்ப்பளித்தல் (adjudication). FSSAI-இன் முன்னெடுப்புகள்: சரியாக உண்போம் இந்தியா (Eat Right India), உணவுப் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் சான்றளிப்பு (FoSTaC), உணவுச் செறிவூட்டல், விரைவுச் சோதனை மூலம் கலப்படத்தைக் கண்டறிதல் (DART), தூய்மையான தெரு உணவு (Clean Street Food), இறைவனுக்கு மகிழ்வான, சுகாதாரமான படையல் (BHOG – Blissful Hygienic Offering to God), நடமாடும் உணவுப் பாதுகாப்பு வாகனம் (Food Safety on Wheels), விழிப்புள்ள உணவு நுகர்வோர் (Food Smart Consumer), கோடெக்ஸ் (Codex), வாழ்வுக்கான உணவுமுறை (Diet for Life) முதலியன.
அலகு 4 : உணவு வேதியியலின் கோட்பாடுகளும் அடிப்படைகளும், மனித ஊட்டச்சத்தில் அவற்றின் பங்கும்
அலகு 5: உணவு நுண்ணுயிரியலும் உணவுச் சுகாதாரத்தின் பொதுக் கோட்பாடுகளும்

அலகு 6: உணவு அறிவியலும் ஊட்டச்சத்தும்

உணவு இடர்கள் (food hazards) பற்றிய புரிதல், உணவு வழிப் பரவும் நோய்கள், நீரும் துப்புரவும், நல்ல சுகாதார நடைமுறைகள் (GHP), நல்ல வேளாண் நடைமுறைகள் (GAP), HACCP, உணவு ஒவ்வாமைகள், உணவுக் கலப்படம், உணவு ஊட்டச்சத்தும் உணவு விழிப்புணர்வும், ஊட்டச்சத்து நிரப்புதல் (supplementation), செறிவூட்டல் (fortification), உயிரியல் செறிவூட்டல் (bio-fortification), மோசமான உணவுமுறையும் அதன் விளைவுகளும்: வளர்ச்சிக் குன்றல் (stunting), உடல் மெலிவு (wasting), இரத்தசோகை (anaemia), வாழ்க்கைமுறை நோய்கள், உணவுச் சோதனையும் விரைவுக் கண்டறிதல் முறைகளும்.

அலகு 7: உணவுத் தரம்

நல்ல உற்பத்தி நடைமுறைகள் (GMP) தணிக்கையும் ஆய்வுகளும், உணவுக் கண்காணிப்பு, உணவைத் திரும்பப் பெறுதல், பதப்படுத்துதலின் அனைத்து நிலைகளிலும் உணவின் தரக் கட்டுப்பாடு, உணவுப் பொதிவுப் பொருள்களில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள், ஒரு தொகுதியிலிருந்து (lot) அல்லது பதப்படுத்தும் வரிசையிலிருந்து மாதிரி எடுத்தல், உணவைச் சிதைக்காமல் அதன் தரத்தை மதிப்பிடும் முறைகள் (non-destructive methods).

அலகு 8: உணவுப் பகுப்பாய்வு மற்றும் சோதனை பற்றிய பொதுவான கருத்துகள்

அலகு 9: உணவுப் பதப்படுத்துதலும் பாதுகாத்தலும்

உணவைப் பாதுகாத்தலின் அடிப்படைக் கோட்பாடுகளும் முறைகளும்: வெப்பப் பதப்படுத்துதல், பாஸ்டர் முறையில் பதப்படுத்துதல் (pasteurization), கலனில் அடைத்தல் (canning), நீர் நீக்குதல் (dehydration), உறைய வைத்தல் (freezing), உறைய வைத்து உலர்த்துதல் (freeze drying), நொதித்தல் (fermentation), நுண்ணலைப் பதப்படுத்துதல் (microwave processing), கதிர்வீச்சு (irradiation), வேதிச் சேர்மானங்கள், குளிர்பதனச் சேமிப்பு, மாற்றியமைக்கப்பட்ட வளிமண்டலச் சேமிப்பு (modified atmosphere storage), நுண்ணுயிர் நீக்கிய நிலையில் பாதுகாத்தல் (aseptic preservation), தடைத் தொழில்நுட்பம் (hurdle technology), மாற்று வெப்பத் தொழில்நுட்பங்கள், வெப்பம் சாராத பதப்படுத்தும் முறைகள் (non-thermal processing), புதிய உணவுச் சேர்மானங்களும் பாதுகாப்புப் பொருள்களும் (preservatives). சந்தையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பாதுகாப்புச் சிக்கல்கள்.

அலகு 10: உணவைப் பாதுகாத்தல், பதப்படுத்துதல், பொதிதல் ஆகியவற்றின் கோட்பாடுகள்

Call Sign In /Signup Free Quiz Zone Get Help Chat

Hi!

ProfHoot

50% Concession for PWD & Transgender Aspirants

Fill out the form now and claim your 50% concession!

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!