Special TET 2026 State-Level Model Exam Today at 4:00 PM!
UGC NET Statistics Model Exam 2026 Today at 5:00 PM!
“சக்சஸ் வரும்னு நினைச்சேன், ஆனா இவ்வளவு பெரிய இடத்துல (State 6th Rank) கிடைக்கும்னு நான் யோசிச்சு கூட பார்க்கல…” –
இது ஏதோ சும்மா உங்களிடம் பகிரப்பட்ட வார்த்தைகள் அல்ல; ஒரு சராசரி, ஆசிரியரின் 10 ஆண்டுகால உழைப்பு தந்த நிதர்சனம்.
எனது பயணம் 2013-லேயே தொடங்கிவிட்டது.
2017-ல் TET தேர்வில் Botany துறையில் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் (95) எடுத்தும்,
அரசாணை மாற்றங்களால் வேலை தள்ளிப்போனது.
100 அடி கிணற்றைத் தோண்டிவிட்டு தண்ணீரைத் தொடப்போகும் நேரத்தில்,
‘இன்னொரு கிணறு தோண்டு’ என்று சொல்வது போலத்தான் இருந்தது 2024-ல் வந்த UG TRB அறிவிப்பு.
ஆனால், நான் விலக நினைக்கவில்லை.
“நம்ம ஹார்ட் வொர்க் ஒருநாள் கண்டிப்பா நம்மள ஒரு நல்ல இடத்துல நிறுத்தும்” என்று நம்பினேன்.
சோர்வு வரும்போது ரெஸ்ட் எடுத்தேன்,
ஆனால் அந்த ‘படிப்பு வட்டத்தை’ (Study Zone) விட்டு ஒருபோதும் வெளியே போகவில்லை.
நிறைய பேர் சொல்வார்கள், “வேலைக்குப்போயிட்டு படிக்க டைம் இல்லை” என்று. எனக்கும் அப்படித்தான்.
பயண நேரப் பயிற்சி:
திருச்சியில் இருந்து நான் வேலைபார்த்த பள்ளிக்கு செல்ல தினமும் 4 மணிநேரப் பயணம் ஆகும்.
அந்தப் பேருந்துக்காகக் காத்திருக்கும் 20 நிமிடங்களைக் கூட நான் வீணாக்கவில்லை;
அந்த நேரத்திலும் ஹின்ட்ஸ் எடுத்துப் படிப்பேன்.
நள்ளிரவு தேர்வுகள்:
பள்ளி முடிந்து வீடு திரும்பவே இரவு 9 மணி ஆகும்.
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு,
இரவு 10 மணி முதல் 12 மணி வரை அகாடமியின் டெஸ்ட் பேட்ச் வினாக்களைத் தீர்ப்பேன்.
தியாகங்கள்:
கடந்த ஒரு வருடத்தில் தீபாவளி, பொங்கல்,
என் Wedding day, குழந்தைகளோட Birthday என எதையுமே நான் கொண்டாடவில்லை.
ஒரு தவம் செய்பவர் எப்படி இருப்பாரோ, அப்படி என்னை மாற்றிக்கொண்டேன்.
Botany-ல் ‘Gene Ratio’ போன்ற எண்கள் சட்டென்று மறந்துவிடும்.
இதைச் சமாளிக்க நான் ஒரு டெக்னிக் ஃபாலோ பண்ணினேன்:
மறக்கக்கூடிய விஷயங்களை மட்டும் ஒரு பேப்பரில் எழுதி என் ‘பவுச்சில்’ (Pouch) வைத்துக்கொள்வேன்.
Exam-க்கு முந்தைய நாள் முழுக்க அந்தப் பேப்பரை மட்டும் தான் படிப்பேன்.
இது கடைசி நேர Tension-னைக் குறைத்து, துல்லியமான விடைகளைத் தர உதவியது.
பழைய வினாத்தாள்களை எடுத்து, அதில் ஒரு டாபிக் (உதாரணமாக: Wood Anatomy) கேட்கப்பட்டிருந்தால்
அந்த யூனிட் முழுவதையும் கவர் செய்துவிடுவேன்.
“உன்னால் முடியாது” என்று யாராவது சொன்னால் அழுவேன்,
ஆனால் அடுத்த நிமிடம் அதைவிட 10 மடங்கு வேகத்தோடு படிக்க ஆரம்பிப்பேன்.
என்னை யாராவது மட்டம் தட்டினால், அதை அவர்களுக்கு ‘டிஸ்ப்ரூவ்’ (Disprove)
செய்து காட்ட வேண்டும் என்ற வெறிதான் என்னை மாநில அளவில் 6-வது இடத்திற்குக் கொண்டு வந்தது.
நான் லைப்ரரியில் அமர்ந்து படிக்கும்போதெல்லாம் ஒரு கனவு காண்பேன்—ரிசல்ட் வருவது போலவும்,
நான் செலக்ட் ஆகி அழுவது போலவும்.
பிப்ரவரி மாதம் ரிசல்ட் வந்த அந்த நாளில், அதேபோல நூலகத்தில் அமர்ந்திருந்தபோது என் தோழி போன் செய்து
“நீ ஸ்டேட் 6th ரேங்க்” என்று சொன்னபோது, நான் கண்ட கனவு அப்படியே நிஜமானது.
அந்த நிமிடம் அழுத அழுகை, என் 10 ஆண்டுகால வலியின் வடிகால்.
வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல;
அது ஒரு லாங் டெர்ம் ஹார்ட் வொர்க். ரெஸ்ட் எடுங்கள், ஆனால் குயட் அவுட் (Quit out) ஆகாதீர்கள்.
கன்சிஸ்டன்சியா இருங்க. உங்கள் ஹார்ட் வொர்க் உண்மையானதா இருந்தா,
கடவுள் கண்டிப்பா வழியைத் திறந்து விடுவார்.
Hope! இவருடைய Success story உங்களுக்கு inspiration, motivation-ஆக இருந்து இருக்கும் என்று நம்புகின்றோம்,
நீங்களும் இவரை போல Success அடைய விரும்பினால் இன்றே Professor Academy – உடன் இணையுங்கள்
To know more about us
Contact : +91 70707 01005 / 70707 01009
Hi!
