Special TET 2026 State-Level Model Exam Today at 4:00 PM!
UGC NET Statistics Model Exam 2026 Today at 5:00 PM!
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வெறும் உழைப்பு மட்டும் போதாது, புத்திசாலித்தனமான திட்டமிடலும் (Smart Work) அவசியம்.
நான் இன்று திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறேன் என்றால், அதற்கு நான் பின்பற்றிய சில எளிமையான ஆனால் வலிமையான வழிமுறைகளே காரணம்.
ஆரம்பத்திலிருந்தே எதையும் மனப்பாடம் செய்வதை விட, அந்தத் தலைப்பைப் புரிந்து கொண்டு மீண்டும் நினைவு கூர்வதிலேயே (Recall) நான் அதிக கவனம் செலுத்தினேன்.
நான் கற்ற ஒவ்வொரு பாடமும் என் நினைவில் ஆழமாகப் பதிய Professor Academy-யின் வகுப்புகள் எனக்குப் பெரும் துணையாக இருந்தன.
ஒவ்வொரு வகுப்பின் போதும் ஆசிரியர்கள் சொல்லும் முக்கியக் குறிப்புகளைக் கைப்பட நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டேன்.
இது பாடத்தைப் புரிந்து கொள்ள உதவுவதுடன், எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அந்தப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போதே பாடங்கள் தானாகவே நினைவுக்கு வரும்.
Professor Academy வழங்கிய Recorded Classes எனக்குப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. ஒருமுறை கேட்டால் புரியாத அல்லது கடினமான தலைப்புகளை மீண்டும் மீண்டும் வீடியோவில் பார்ப்பேன்.
ஒரே விளக்கத்தைப் பலமுறை கேட்கும்போது, அந்தப் பாடங்கள் தானாகவே என் மனதில் பதிந்துவிடும்.
இதற்காகத் தனியாக உட்கார்ந்து மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமே எனக்கு ஏற்படவில்லை.
ஆங்கில இலக்கியத்தில் (Prose & Poetry) தேர்ச்சி பெற, நான் வெறும் சுருக்கங்களை (Summaries) மட்டும் நம்பியிருக்கவில்லை.
Poetry, Prose அவற்றின் Original Texts கொண்டு பலமுறை வாசித்தேன். இது அந்த ஆசிரியரின் நடை, கருப்பொருள் மற்றும் முக்கியமான வரிகளை (Important Lines) எளிதில் அடையாளம் காண எனக்கு உதவியது.
ஒரு தேர்வர் சரியான பாதையில் செல்கிறாரா என்பதை உறுதிப்படுத்தச் சரியான வழிகாட்டி (Mentor) அவசியம்.
தொடர்ச்சியான பயிற்சி, முறையான குறிப்புகள் மற்றும் சரியான கற்றல் வளங்களைப் பயன்படுத்தினால் PG TRB தேர்வில் வெற்றி பெறுவது உறுதி.
என்னுடைய இந்த ‘Smart Strategy’ உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
உங்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் கனவு இருக்கிறதா?
சரியான வழிகாட்டுதலுடன் உங்கள் பயணத்தைத் தொடங்க இன்றே Professor Academy-யில் இணையுங்கள். உங்கள் வெற்றிச் செய்திக்காக நாங்கள் காத்திருக்கிறோம்!
Contact: +91 7070701005 / 7070701009
Hi!
