BEO Tamil Eligibility Test Syllabus

உயர்நிலை – மொழிப்பாடத்திட்டம் – தமிழ் மொழி மானுடத்தின் அடையாளம்; கருத்துப் பரிமாற்றத்திற்கான ஆற்றல் வாய்ந்த ஊடகம். ஒரு சமுதாயத்தின் அறிவு, பண்பாடு, வரலாறு, தத்துவம் ஆகியவற்றோடு இரண்டறக் கலந்ததாகவும் அவற்றின் கருவூலமாகவும் மொழி விளங்குகிறது. தனி மனிதர் சிந்திக்கவும் படைப்பாக்கத் திறன் பெறவும் மொழியே அடிப்படையாக அமைகிறது. எல்லாக் குழந்தைகளும் இயல்பூக்கம் காரணமாகத் தாம் வாழும் சூழலில் இருந்தே மொழியறிவைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆயினும், அதனை முறையாகத் திறம்பட வளர்த்தெடுப்பதில் கல்விக்கூடங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதன்படி, மாணவர் […]
