முதல் முயற்சியிலேயே TRB தேர்வில் 124 மதிப்பெண்கள் பெற்று General Category -மெரிட்டில் வென்ற என் பயணம்!

Poorana Maheswari B UG TRB Chemistry Achiever

 

 

 

 

அனைவருக்கும் வணக்கம்! நான் Poorana Maheswari B, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவள். 

 

சமீபத்தில் நடந்த UG TRB Chemistry தேர்வில் 124 மதிப்பெண்கள் பெற்று, பொதுப் பிரிவில் (General Category) Merit List-ல் இடம்பிடித்துள்ளேன். 

 

ஒரு இல்லத்தரசியாக, இந்த வெற்றியை நான் எப்படி அடைந்தேன் என்பதை உங்கள் முன் பகிர்கிறேன்.

 

 

 

 

 

 

ஆரம்ப கால தடுமாற்றங்கள்

 

ஜனவரி 2023-ல் நான் படிக்கத் தொடங்கியபோது எந்த அகாடமிக்கும் போகவில்லை. 

 

Youtube வீடியோக்களைப் பார்த்து Hints எடுத்தேன். ஆனால், கையில் முறையான Syllabus இல்லை, எந்தத் தலைப்பு முக்கியம் என்றும் தெரியவில்லை. 

 

3 மாதங்கள் இப்படிச் சுய முயற்சியில் போராடினேன், ஆனால் முடிவுகள் திருப்திகரமாக இல்லை.

 

அப்போதுதான் என் தோழி பீனாவுடன் சேர்ந்து Professor Academy-யைத் தேர்ந்தெடுத்தேன்.

 

 

 

ஏன் Professor Academy?

 

நாங்கள் பல அகாடமிகளை ஒப்பிட்டுப் பார்த்தோம்.

 

மற்ற அகாடமிகளில் வேதியியல் பாடத்திற்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் பாதி கட்டணத்திலேயே மிகச் சிறந்த பயிற்சியை வழங்கியது எங்களது அகாடமிதான். 

 

Finance-யலாக என் கணவரைச் சார்ந்திருந்த எனக்கு, இது மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

 

 

பாடங்களை அணுகிய முறை (Subject-wise Strategy)

 

வேதியியல் என்பது வெறும் மனப்பாடம் செய்யும் பாடம் அல்ல, அது புரிந்துகொள்ள வேண்டிய கலை. அகாடமியில் எனக்குக் கிடைத்த வழிகாட்டுதல் இதோ:

 

 

ஆர்கானிக் கெமிஸ்ட்ரி (Organic Chemistry): 

 

Academy staff’s அடிப்படை முதல் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியைச் செதுக்கினார். 

 

குறிப்பாக, வேதியியலில் உள்ள விதிவிலக்குகளை (Exceptions) அவர் விளக்கிய விதம், தேர்வில் வரும் Tricky கேள்விகளை எதிர்கொள்ள எனக்கு உதவியது.

 

 

அடிப்படை முதல் அட்வான்ஸ் வரை: 

 

ஒரு பள்ளி மாணவருக்குச் சொல்வது போல அணு எண், நிறை எண் என மிக அடிப்படையிலிருந்து பாடங்களை ஆரம்பிப்பார்கள். 

 

“நாம் PG முடித்தவர்கள், இதெல்லாம் நமக்குத் தெரியுமே” என்று நினைக்காமல் அந்த அடிப்படையைக் கவனித்ததுதான், பின்னாளில் கடினமான பாடங்களை எளிதாகப் புரிய வைத்தது.

 

 

ப்ராப்ளம் சால்விங் (Problem Solving): 

 

Theory-யை எல்லாரும் படித்துவிடலாம், ஆனால் கணக்குகளில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது. 

 

மேலும் எங்களது staffs எங்களை PG TRB மற்றும் பாலிடெக்னிக் TRB வினாக்களைக் கொண்டு வந்து எங்களை Work-Out செய்ய வைப்பார்கள். 

 

சோர்வடையும் போதெல்லாம் அவர்களது மோட்டிவேஷன் எங்களை உற்சாகப்படுத்தும்.

 

 

நள்ளிரவுப் போர் மற்றும் குழு விவாதம்

 

எனது வெற்றியில் Group Study முக்கியப் பங்கு வகித்தது. நானும் என் தோழிகளும் ஒரு தனித்துவமான முறையைப் பின்பற்றினோம்:

 

 

இரவு நேர கணக்குகள்: 

 

பகல் முழுவதும் Theory படிப்போம். 

 

இரவு 10 மணிக்கு மேல் தான் கடினமான கணக்குகளை (Problems) ஆரம்பிப்போம். 

 

அதிகாலை 2 மணி வரை கான்பரன்ஸ் காலிலேயே விவாதித்து விவாதித்து கணக்குகளை முடிப்போம். 

 

இரவு நேரத்தில் கணக்குகள் போடுவதால் தூக்கம் வராது, ஆர்வமும் குறையாது.

 

 

கான்பரன்ஸ் கால் டிஸ்கஷன்: 

 

ஒரு Unit முடித்ததும் மூவரும் போனில் இணைந்து விவாதிப்போம். 

 

ஒரு பாயிண்ட்டை நான் ஒரு மாதிரி புரிந்திருப்பேன், என் தோழி வேறு மாதிரி புரிந்திருப்பார். அந்த விவாதம் தான் பல புதிய ஐடியாக்களைக் கொடுத்தது.

 

 

NEET & JEE பயிற்சி: 

 

UG TRB Exam தள்ளிப்போன ஒரு மாத காலத்தில் நாங்கள் சும்மா இருக்கவில்லை. 

 

NEET மற்றும் JEE புத்தகங்களை வாங்கி அதில் உள்ள Advance கணக்குகளைப் பயிற்சி செய்தோம்.

 

 

 

டெஸ்ட் சீரிஸ் (Test Series) மற்றும் ஓஎம்ஆர் (OMR) ரகசியம்

 

அகாடமி நடத்திய ஒவ்வொரு Topic wise Test மற்றும் மாக் டெஸ்டையும் தவறாமல் எழுதினேன்.

 

PDF ரிவிஷன்: 

 

டெஸ்ட் முடித்ததும் அதன் விடைகளை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துவிடுவேன். 

 

நான்கு ஆப்ஷன்களுக்கும் பக்கத்திலேயே குறிப்புகளை எழுதி வைப்பேன். இதுதான் என் “பைபிள்”.

 

OMR பயிற்சி: 

 

30 மார்க் டெஸ்ட் தானே என்று அசால்ட்டாக இருக்காமல், ஒவ்வொரு தேர்வையும் அகாடமி கொடுத்த ஓஎம்ஆர் ஷீட்டில்தான் ஷேட் செய்து பழகினேன். 

 

அந்த 3 மணி நேர மேனேஜ்மென்ட் அங்கேயே எனக்குக் கைவந்தது.

 

 

தேர்வர்களுக்கு என் 5 Tipsகள்:

 

நோட்டிபிகேஷனுக்காக வெயிட் பண்ணாதீங்க: 

 

அறிவிப்பு வரும் முன்னே 6-7 யூனிட்களை முடித்துவிடுங்கள்.

 

ஸ்கூல் புக்ஸ் தான் பேஸ்: 

 

11, 12-ஆம் வகுப்பு வேதியியல் புத்தகங்களை முதலில் கரைத்துக் குடியுங்கள்.

 

ஷார்ட் நோட்ஸ்: 

 

2 மணி நேரக் கிளாஸை ஒரு பக்கத்தில் ஷார்ட் நோட்ஸாக எடுங்கள். இதுதான் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும்.

 

டிஜிட்டல் டிடாக்ஸ்: 

 

நோட்டிபிகேஷன் வந்ததும் Social media , YouTube engage ஆவதை தியாகம் செய்யுங்கள்.

 

3 மணி நேரக் கவனம்: 

 

கேள்வி ஈஸியாக இருந்தால் உடனே ஓஎம்ஆரில் கை வைக்காதீர்கள். 

 

ட்விஸ்ட் இருக்கிறதா என்று இரண்டு முறை வாசித்துப் பார்த்துவிட்டு ஷேட் செய்யுங்கள்.

 

 

 

Final Thoughts

 

இல்லத்தரசியாக இருந்து நான் சாதித்ததற்கு என் குடும்பத்தின் ஆதரவும், Professor Academy-யின் முறையான பயிற்சியும் தான் காரணம். 

 

“முதல் முயற்சியிலேயே மெரிட்டில் வருவேன்” என்று நான் கொண்ட அந்த நம்பிக்கை இன்று நனவாகியுள்ளது.

 

தோல்வி அடைந்தவர்கள் கலங்க வேண்டாம். 

 

அடுத்த முறை அந்த மெரிட் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்க இப்போதே உழைக்கத் தொடங்குங்கள். என்னால் முடிந்தால் உங்களாலும் முடியும்!

 

இவரைப்போல நீங்களும் அடுத்த வெற்றியாளராக மாற இன்றே உங்கள் பயிற்சியை Professor Academy-யில் தொடங்குங்கள்!

 

 

இணையதளம்: www.professoracademy.com 

 

தொடர்புக்கு: +91 7070701005 / 7070701009

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!