TNPSC Group 4 | 40-Day Study Planner 2026–2027

TNPSC Group4 40 Days Study Plan

TNPSC Group 4 |40-Day Study Planner 2026–2027

TNPSC Group 4 தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் பெரும்பாலான தேர்வர்கள் எதிர்கொள்ளும் சவால், படிப்பதற்கான நேரம் குறைவாக இருப்பது மட்டுமல்ல; இருக்கின்ற நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதுதான்.
மீதமுள்ள 40 நாட்களில் அனைத்துப் பாடங்களையும் ஒரே நேரத்தில் படிக்க முயற்சிப்பதைவிட, முக்கியமான பாடப்பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, படித்தவற்றைத் தொடர்ந்து Revision செய்து, தேர்வு முறைக்கு ஏற்ப பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC Group 4 40-Day Study Planner 2026, General Tamil, General Studies மற்றும் Aptitude & Mental Ability ஆகிய மூன்று பகுதிகளையும் ஒருங்கிணைத்து, தேர்வுக்கு முறையாகத் தயாராக உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 40-Day Study Plan – Key Takeaways

1. TNPSC Group 4 40-Day Study Plan – Introduction

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது மட்டுமல்லாமல், அந்த நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்.

குறிப்பாக TNPSC Group 4 தேர்வில் General Tamil மட்டும் 100 வினாக்களைக் கொண்டிருப்பதால், அதற்கான தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் General Studies மற்றும் Aptitude பகுதிகளைப் புறக்கணிக்காமல் தொடர்ந்து பயிற்சி செய்வதும் அவசியம்.

இந்த Study Planner யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?

இந்த Study Plan தினமும் 6–8 மணி நேரம் படிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய Preparation Level மற்றும் நேரத்திற்கு ஏற்ப இதனை மாற்றிப் பயன்படுத்தலாம்.

உங்களுடைய தயாரிப்பு நிலையைப் புரிந்துகொள்ள, முதலில் ஒரு Previous Year Question Paper அல்லது Full-Length Mock Test எழுதிப் பாருங்கள். அதன் மூலம் எந்தப் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகும்.
TNPSC Group 4 Notification 2026 released for 6574 vacancies in Tamil Nadu

TNPSC Group 4 Notification 2026 – Check the Complete Details!

விண்ணப்பிக்கும் முன் தகுதித் தேவைகள், காலிப்பணியிட விவரங்கள், தேர்வு அட்டவணை மற்றும் விண்ணப்ப வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.

2. TNPSC Group 4 Exam Pattern
40 நாட்களுக்கான படிப்பு அட்டவணையை உருவாக்குவதற்கு முன், எந்தப் பாடத்திலிருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
அனைத்துப் பாடங்களுக்கும் ஒரே அளவு நேரம் ஒதுக்குவது சிறந்த அணுகுமுறை அல்ல. கேள்விகளின் எண்ணிக்கை மற்றும் பாட அறிவின் அடிப்படையில் நேரத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
Part Subject Questions
Part A Tamil Eligibility-cum-Scoring Test 100
Part B General Studies 75
Aptitude and Mental Ability 25
Total 200
Exam Duration: 3 Hours
Exam Particulars Details
Exam Mode Offline – OMR Based
Question Type Objective Type (MCQs)
Exam Duration 3 Hours
Part A Minimum Qualifying Marks 60 out of 150 (40%)
Overall Minimum Qualifying Marks 90 out of 300
Negative Marking No Negative Marking for incorrect answers

Part A-ல் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே Part B மதிப்பீடு செய்யப்படும். General Tamil மதிப்பெண்களும் மொத்த மதிப்பெண்களில் கணக்கிடப்படும்.

குறைந்தபட்ச Qualifying Marks பெறுவது மட்டுமே வேலைவாய்ப்பை உறுதி செய்யாது. அதிக மதிப்பெண்களைப் பெறுவதே Preparation Target ஆக இருக்க வேண்டும்.
3. TNPSC Group 4 40-Day Study Planner – Daily routine
இந்த 40 நாள் திட்டத்தை வெறும் படிப்பு அட்டவணையாக மட்டும் பயன்படுத்தாமல், உங்களுடைய தினசரி Preparation Progress-ஐ மதிப்பீடு செய்யும் கருவியாகவும் பயன்படுத்த வேண்டும்.
S.No Duration Block Phase 1 Content Phase 2 / 3 Content
1 2 h Tamil (morning, fresh mind) Day’s Tamil topic from the table Revision + PYQ + weak areas
2 2 h General Studies main subject Day’s GS topic from the table Rotating rapid revision
3 1.5 h Aptitude & Mental Ability Day’s aptitude topic: 30 min concept, 60 min practice Timed sets, speed drills
4 30 min Current events Daily news: TN + India (newspaper/monthly digest) Revise monthly digests
5 1 h MCQ practice 25–30 MCQs on today’s topics, no looking at notes Previous year papers and mock analysis
6 1 h Night revision Re-read today’s notes; add wrong answers to the error log Error log only
6 மணி நேரம் மட்டுமே படிக்க முடிந்தாலும், எந்த ஒரு பாடத்தையும் முழுமையாகத் தவிர்க்காமல் நேரத்தைச் சுருக்கிப் பயன்படுத்துவும்.

4. TNPSC Group 4 40-Day Study Planner – Day-Wise Schedule

Phase 1 – Learn the full syllabus (27 Nov – 20 Dec, 24 days)

Every non-Sunday day: one Tamil topic, one GS topic, one Aptitude topic (some days combine two small topics). Sundays are weekly test days. Shaded days are tests.
Day Date Tamil (2 h) General Studies (2 h) Aptitude (1.5 h)
1 Fri, 27 Nov எழுத்து இலக்கணம் – எழுத்து வகைகள், சுட்டு, வினா, மொழிமுதல்/இறுதி எழுத்துகள் + சொல் இலக்கணம் – பெயர், வினை, இடை, உரிச்சொல்; திணை, பால், இடம் Polity 1 – Constitution: making, Preamble, salient features, Schedules, Fundamental Rights/Duties, DPSP Simplification, BODMAS, number system basics + HCF and LCM
2 Sat, 28 Nov புணர்ச்சி, வேற்றுமை, தொகை நிலைத் தொடர்கள் Polity 2 – Union: President, PM & Council, Parliament, Supreme Court, Amendments, Emergency + Polity 3 – States: Governor, CM, Legislature, High Court, Local bodies (73rd/74th), Election Commission, Constitutional bodies, UPSC/TNPSC Ratio and Proportion
3 Sun, 29 Nov WEEKLY TEST DAY Weekly Test 1 – Tamil grammar (50 Q) + Polity (25 Q) + Aptitude arithmetic (15 Q); analysis; start error log Review all mistakes; re-learn; rest of the day light revision
4 Mon, 30 Nov பொருள் இலக்கணம் – அகம், புறம், திணை, துறை TN Development Administration 1 – Social justice, reservation, welfare schemes, Dravidian movement basics Percentage
5 Tue, 1 Dec யாப்பு – அசை, சீர், தளை, அடி, தொடை, பா வகைகள் TN Development Administration 2 – Education, health, industrial and agricultural development, e-governance, State schemes Simple Interest + Compound Interest
6 Wed, 2 Dec அணி இலக்கணம்; பிழை திருத்தம் (ஒற்றுப்பிழை, சந்திப்பிழை, ஒருமை-பன்மை) Indian Economy 1 – Nature of economy, national income, planning, NITI Aayog, Five-Year Plans Time and Work
7 Thu, 3 Dec சொல்லறிவு – பொருள் வேறுபாடு, எதிர்ச்சொல், ஒருமொழிப் பல பொருள், பிரித்தெழுதுதல், பிறமொழிச் சொல் நீக்கல் + மரபுத்தொடர், பழமொழி, இணைமொழி, வேர்ச்சொல், வழுவமைதி Indian Economy 2 – Banking, RBI, inflation, taxation/GST, budget, money market + Indian Economy 3 – Agriculture, industry, poverty/unemployment, welfare schemes, TN economy Area (2D) + Volume and surface area
8 Fri, 4 Dec திருக்குறள் – அறத்துப்பால் (அதிகாரங்கள், பொருண்மை); திருவள்ளுவர் குறிப்புகள் + திருக்குறள் – பொருட்பால், காமத்துப்பால்; மேற்கோள் குறள்கள் TN History & Culture 1 – Sangam age, Cholas, Pallavas, Pandyas, art and architecture Profit & Loss, Average (frequently asked)
9 Sat, 5 Dec சங்க இலக்கியம் – எட்டுத்தொகை (நூல்கள், ஆசிரியர்கள், பாடல் வகை) TN History & Culture 2 – Medieval/Nayak/Maratha, European settlements, 19th-century TN, social reformers + TN History & Culture 3 – Freedom struggle in TN, Justice Party, Self-Respect, Tamil culture, temples, festivals Speed, Time, Distance (frequently asked)
10 Sun, 6 Dec WEEKLY TEST DAY Weekly Test 2 – Tamil grammar + vocabulary (50 Q) + Polity/TN Admin/Economy/TN History (25 Q) + Aptitude (15 Q); analysis Review all mistakes; re-learn; rest of the day light revision
11 Mon, 7 Dec பத்துப்பாட்டு – நூல், புலவர், பாடப்பட்ட மன்னர்/வள்ளல்கள் History & Culture of India 1 – Indus Valley, Vedic, Mahajanapadas, Mauryas, Guptas, Sangam link, art and architecture Number series
12 Tue, 8 Dec பதினெண்கீழ்க்கணக்கு – நாலடியார், நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி உள்ளிட்ட நூல்கள் History & Culture of India 2 – Delhi Sultanate, Mughals, Marathas, Bhakti/Sufi, composite culture Alpha-numeric reasoning
13 Wed, 9 Dec ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுங்காப்பியம் – சிலப்பதிகாரம், மணிமேகலை; கதை மாந்தர் Indian National Movement 1 – 1857, Congress formation, Moderates/Extremists, Swadeshi, Home Rule Coding-decoding, odd one out, analogy
14 Thu, 10 Dec பக்தி இலக்கியம் – தேவாரம், திருவாசகம், ஆழ்வார்கள், திருமந்திரம், பெரியபுராணம் Indian National Movement 2 – Gandhian era, Quit India, INA, Partition, freedom fighters of TN, Independence Dice
15 Fri, 11 Dec கம்பராமாயணம்; சிற்றிலக்கியங்கள் – பிள்ளைத்தமிழ், உலா, கலம்பகம், பரணி, தூது Geography 1 – Universe, Earth, landforms, rocks, atmosphere, oceans, climate Visual reasoning (mirror/water image, figure series)
16 Sat, 12 Dec இக்கால இலக்கியம் – பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், கண்ணதாசன் Geography 2 – India: physiography, rivers, soils, vegetation, agriculture, minerals, transport Puzzles (arrangements, seating)
17 Sun, 13 Dec WEEKLY TEST DAY Weekly Test 3 – Tamil literature (50 Q) + India History/INM/Geography (25 Q) + Aptitude (15 Q); analysis Review all mistakes; re-learn; rest of the day light revision
18 Mon, 14 Dec உரைநடை, புதினம், சிறுகதை, நாடகம் – ஆசிரியர்கள், படைப்புகள் Geography 3 – Tamil Nadu: districts, rivers, soils, crops, industries, disaster management, population/census Calendar and clock + Direction sense, blood relations, ranking
19 Tue, 15 Dec தமிழ் அறிஞர்கள் – உ.வே.சா, வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப், மறைமலையடிகள் + தமிழ்த்தொண்டு – இயக்கங்கள், தனித்தமிழ், அகராதி, சங்கங்கள், தமிழ் வளர்ச்சிக்கான அரசு திட்டங்கள் General Science – Physics (motion, force, energy, light, sound, heat, electricity, magnetism, units) Logical deduction / statement-conclusion
20 Wed, 16 Dec தமிழ் இலக்கிய வரலாறு – காலவரிசை; தமிழகப் பண்பாடு, கலை, விழாக்கள் General Science – Chemistry (matter, atomic structure, periodic table, acids-bases, metals, carbon, polymers) Timed mixed arithmetic set (25 Q / 30 min)
21 Thu, 17 Dec நூலும் நூலாசிரியரும், அடைமொழி, சிறப்புப் பெயர், இயற்றியவர் வினாக்கள் General Science – Biology 1 (cell, tissues, plant and animal kingdom, human body systems) + General Science – Biology 2 + Health (genetics, nutrition, diseases, vaccines, health schemes) Timed mixed reasoning set (25 Q / 30 min)
22 Fri, 18 Dec பாடல் வரி/மேற்கோள் அடையாளம் காணுதல் (யார் எழுதியது, எந்த நூல்) General Science – Environment and ecology (ecosystem, pollution, climate change, biodiversity, TN wildlife) Weak-topic repair from error log
23 Sat, 19 Dec தமிழ் முழு மறுபார்வை – இலக்கணம் + இலக்கியம் குறிப்புத் தாள் (flash notes) GS consolidation – one-page mind-maps for every subject; list weak areas Formula + shortcut sheet revision
24 Sun, 20 Dec WEEKLY TEST DAY Weekly Test 4 – Tamil (50 Q) + Geography/General Science (25 Q) + Aptitude (15 Q); full revision of 4 weeks’ error log Review all mistakes; re-learn; rest of the day light revision

Phase 2 – Revise and practise (21 Dec – 2 Jan, 13 days)

Add 1.5 h of previous-year papers each day, and a 1 h error-log session at night. Sunday 27 Dec is Full Mock 1.
Day Date Tamil (1.5 h) General Studies Revision (2 h) Aptitude (1.5 h)
25 Mon, 21 Dec Grammar revision – எழுத்து, சொல், புணர்ச்சி Polity (rapid revision + 50 MCQ) Arithmetic: percentage, ratio, SI/CI set
26 Tue, 22 Dec Grammar – பொருள், யாப்பு, அணி, பிழை திருத்தம் TN Development Administration Arithmetic: time & work, area, volume set
27 Wed, 23 Dec சொல்லறிவு, மரபுத்தொடர், பழமொழி Indian Economy Reasoning: series, coding, alpha-numeric
28 Thu, 24 Dec திருக்குறள் + சங்க இலக்கியம் TN History & Culture Reasoning: dice, visual, puzzles
29 Fri, 25 Dec அறநூல்கள் + காப்பியங்கள் History & Culture of India Reasoning: directions, blood relations, calendar
30 Sat, 26 Dec பக்தி + சிற்றிலக்கியம் Indian National Movement Mixed timed set (25 Q)
31 Sun, 27 Dec FULL MOCK TEST 1
(200 Q, 3 h, 9:30–12:30) + 3 h analysis
Part of the mock Part of the mock
32 Mon, 28 Dec Modern literature + அறிஞர்கள் + தமிழ்த்தொண்டு Geography (India + TN) Arithmetic timed set + shortcuts
33 Tue, 29 Dec Tamil PYQ paper (100 Q, 90 min) + review General Science – Physics, Chemistry Reasoning timed set
34 Wed, 30 Dec Weak areas from Mock 1 (Tamil) General Science – Biology, Health Weak-topic repair
35 Thu, 31 Dec நூல்-ஆசிரியர், அடைமொழி, சிறப்புப் பெயர் Environment, disaster management, TN geography Mixed set (25 Q)
36 Fri, 1 Jan Tamil PYQ paper 2 + review Current events consolidation (last 6 months, TN + India) Speed set – 25 Q in 25 min
37 Sat, 2 Jan Mistakes notebook – Tamil only GS PYQ set (75 Q, 60 min) + review Full aptitude test (25 Q) + formula sheet

Phase 3 – Mocks and final revision (3 Jan – 8 Jan, 6 days)

Day Date Tamil General Studies Aptitude
38 Sun, 3 Jan FULL MOCK TEST 2 (OMR practice, 3 h) Analysis 3 h: classify errors (concept / silly / time) Re-attempt wrong aptitude questions
39 Mon, 4 Jan Tamil quick revision (grammar + literature notes) Rapid revision: Polity, TN Admin, Economy Formula sheet + shortcut drill (45 min)
40 Tue, 5 Jan FULL MOCK TEST 3 (3 h) Analysis 3 h Re-attempt wrong questions
41 Wed, 6 Jan Tamil error log + flash notes Rapid revision: TN History, India History, INM, Geography Reasoning drill (visual, dice, puzzles)
42 Thu, 7 Jan MOCK 4: Tamil 100 Q (90 min) + Aptitude 25 Q (30 min) General Science + current events rapid pass Analysis of mock 4
43 Fri, 8 Jan Light: mnemonics, author–book lists, error log; check hall ticket, centre route, pen, ID Light: mind-maps, dates, schemes, last 3 months of current events Light: formulas only; no new topics. Sleep early

இறுதி நாளில் நீண்ட நேரம் படிப்பதைத் தவிர்த்து, Hall Ticket, Exam Centre மற்றும் தேவையான ஆவணங்களைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். போதுமான தூக்கமும் தேர்வு தயாரிப்பின் ஒரு பகுதியாகும்.

5. TNPSC Group 4 Subject-Wise Weightage and Priority

அனைத்துப் பாடங்களுக்கும் ஒரே அளவு நேரத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக, வினாக்களின் எண்ணிக்கை, பாடத்தின் கடினத்தன்மை மற்றும் தற்போதைய திறன் ஆகியவற்றின் அடிப்படையில் படிப்பு நேரத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
Subject Weightage Preparation Priority
General Tamil 50% Very High
General Studies 37.5% High
Aptitude & Mental Ability 12.5% Daily Practice

TNPSC Group 4 Subject-Wise Preparation Tips

General Tamil Preparation Strategy

General Tamil பகுதியில் அதிக மதிப்பெண்களைப் பெறுவது TNPSC Group 4 தேர்வின் மொத்த மதிப்பெண்களை உயர்த்துவதற்கு முக்கியமானதாகும்.

இலக்கண விதிகளை மனப்பாடம் செய்வதுடன், அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் புரிந்துகொள்ள வேண்டும். நூல்கள், நூலாசிரியர்கள், சிறப்புப் பெயர்கள் மற்றும் இலக்கிய மேற்கோள்களை அட்டவணை வடிவில் தயாரித்துப் படிப்பது Revision செய்ய உதவும்.

General Tamil Preparation Strategy

General Studies பகுதியில் பல்வேறு பாடங்கள் இடம்பெறுவதால், எந்தப் பாடத்தை முதலில் படிப்பது என்ற குழப்பம் ஏற்படலாம்.

Indian Polity, Tamil Nadu Development Administration, Indian Economy மற்றும் History போன்ற பாடங்களை Concept-wise படித்த பிறகு, Geography மற்றும் General Science பகுதிகளைத் திட்டமிட்டு Revision செய்யவும்.

முக்கிய ஆண்டுகள், சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள், அரசுத் திட்டங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை ஒப்பீட்டு அட்டவணைகள் அல்லது Mind Maps மூலம் படிப்பது நினைவுகூர உதவும்.

Preparation Tips

Suggested Target: 80–90 சரியான விடைகளை நோக்கிப் பயிற்சி மேற்கொள்ளலாம். இது பரிந்துரைக்கப்படும் Practice Target மட்டுமே.

Aptitude and Mental Ability Preparation Strategy

Aptitude பகுதியில் கணக்குகளைப் புரிந்துகொள்வதுடன், குறைந்த நேரத்தில் சரியான விடையைக் கண்டறியும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
Aptitude பகுதியில் கணக்குகளைப் புரிந்துகொள்வதுடன், குறைந்த நேரத்தில் சரியான விடையைக் கண்டறியும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு கணக்கைச் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால், அதற்கான அடிப்படை Concept அல்லது Calculation Method-ஐ மீண்டும் பயிற்சி செய்யுவும்.

Preparation Tips

6. TNPSC Group 4 Mock Test and Revision Strategy

Mock Test மதிப்பெண்கள் குறைவாக வரும்போது, அடுத்த Mock Test எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. முந்தைய தேர்வில் ஏன் மதிப்பெண்கள் குறைந்தன என்பதைப் புரிந்துகொள்வதே முன்னேற்றத்திற்கான முதல் படியாகும்.
Step Activity Description
01 Attempt the Mock Test 200 Questions · 180 Minutes
02 Evaluate Your Answers Identify correct, incorrect and unattempted questions
03 Classify Your Mistakes Concept errors, careless mistakes and time management
04 Revise Weak Topics Use short notes, textbooks and PYQs
05 Reattempt Incorrect Questions Check whether the mistakes have been corrected
06 Take the Next Mock Test Compare accuracy, marks and completion time

Maintain an Error Notebook

ஒவ்வொரு Mock Test-லும் தவறாக விடையளித்த வினாக்களைப் பதிவு செய்வதற்குத் தனியாக Error Notebook வைத்துக்கொள்ளவும்.
Topic Reason for Mistake Corrective Action
Indian Polity Concept Not Clear Revise Relevant Articles
General Tamil Author–Book Confusion Prepare Flash Cards
Percentage Calculation Error Practise Similar Questions
Current Affairs Information Not Revised Revise Monthly PDF
Reasoning Time Management Timed Practice

Follow the 1–3–7 Revision Method

Revision Cycle Activity
Day 1 படித்த பாடத்தை அன்றே மீண்டும் படித்தல்
Day 3 Short Notes மற்றும் முக்கிய வினாக்களை Revision செய்தல்
Day 7 Topic-wise Test மூலம் நினைவாற்றலை மதிப்பீடு செய்தல்
ஒரே பாடத்தைத் திட்டமிட்ட இடைவெளிகளில் மீண்டும் படிப்பது, நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.

7. Common Mistakes to Avoid During the Last 40 Days

தேர்வுக்கு முந்தைய இறுதிக்கட்டத்தில் செய்யும் சில தவறுகள், ஏற்கனவே மேற்கொண்ட தயாரிப்பின் பயனைக் குறைக்கலாம்.
தவிர்க்க வேண்டிய தவறுகள் அதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும்?
தினமும் Study Plan மாற்றுவது பின்பற்றக்கூடிய ஒரே திட்டத்தைத் தேர்வு செய்யவும்.
படித்த பாடங்களை Revision செய்யாமல் இருப்பது தினசரி Revision நேரத்தை ஒதுக்குங்கள்.
கடினமான பாடங்களை முழுமையாகத் தவிர்ப்பது அடிப்படையிலிருந்து சிறிய பகுதிகளாகப் படிக்கவும்.
பல Study Materials பயன்படுத்துவது நம்பகமான குறிப்பிட்ட புத்தகங்களைப் பயன்படுத்தவும்.
Mock Test எழுதுவதைத் தள்ளிப்போடுவது பாடத்திட்டம் முழுமையாக முடியாவிட்டாலும் Test எழுதவும்.
மதிப்பெண்கள் குறைவதால் பயிற்சியை நிறுத்துவது தவறுகளைக் கண்டறிந்து அடுத்த Test-க்குத் தயாராகவும்.
தூக்கத்தைக் குறைத்துப் படிப்பது போதுமான ஓய்வுடன் தொடர்ந்து படிக்கவும்.
ஒரு நாள் படிப்பு அட்டவணையை முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை என்றால், அதற்காக முழுத் திட்டத்தையும் கைவிட வேண்டாம். விடுபட்ட முக்கியப் பாடங்களை அடுத்த Revision நாளில் சேர்த்துக்கொள்ளவும்.

TNPSC 4 Group Course – Professor Academy

Professor Academy வழங்கும் TNPSC Group 4 Crash Course, குறைந்த காலத்தில் பாடத்திட்ட அடிப்படையில் தேர்வுக்குத் தயாராக விரும்புபவர்களுக்கான கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டமாகும்.எதைப் படிப்பது என்று தினமும் திட்டமிடுவதில் நேரத்தைச் செலவிடாமல், படிப்பதிலும் பயிற்சி செய்வதிலும் கவனம் செலுத்தவும்.

Frequently Asked Questions (FAQs)

40 நாட்களில் TNPSC குரூப் 4 தேர்வுக்குத் தயாராக முடியுமா?
முக்கியப் பாடப்பகுதிகள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் (Previous Year Questions), திருப்புதல் (Revision) மற்றும் மாதிரித் தேர்வுகள் (Mock Tests) ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து 40 நாட்களில் பயனுள்ள தயாரிப்பை மேற்கொள்ளலாம். இருப்பினும், முழுப் பாடத்திட்டத்தையும் முடிப்பது உங்களுடைய தற்போதைய தயாரிப்பு நிலையைப் பொறுத்தது.
முழுநேரமாகத் தயாராகுபவர்கள் தினமும் 6–8 மணி நேரம் படிக்கத் திட்டமிடலாம். வேலைக்குச் செல்பவர்கள் கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப 3–4 மணி நேரத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்தலாம்.
பொதுத் தமிழ் (General Tamil), இந்திய அரசியலமைப்பு (Indian Polity), இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) மற்றும் தமிழ்நாடு வரலாறு (Tamil Nadu History) ஆகிய பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். உங்களுக்கு எந்தப் பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாக வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் இலக்கணம், சொல்லகராதி, எழுதும் திறன் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைத் தினமும் படித்து, முந்தைய ஆண்டு பொதுத் தமிழ் வினாக்கள் (PYQs) மற்றும் பகுதிவாரியான தேர்வுகள் (Sectional Tests) மூலம் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் தேர்வின் கேள்வி அமைப்பைப் புரிந்துகொள்ள உதவும். ஆனால் அவற்றுடன் பாடத்திட்ட அடிப்படையிலான படிப்பு, நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) மற்றும் மாதிரித் தேர்வுகள் (Mock Tests) ஆகியவையும் அவசியம்.
தயாரிப்பு நிலை மற்றும் நேரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் 5 முழு மாதிரித் தேர்வுகள் (Full-Length Mock Tests) எழுதுவதை இலக்காக வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு தேர்வுக்குப் பிறகும் தவறுகளை ஆய்வு செய்வது (Error Analysis) முக்கியம்.
Call Sign In /Signup Free Quiz Zone Get Help Chat

Hi!

ProfHoot

50% Concession for PWD & Transgender Aspirants

Fill out the form now and claim your 50% concession!

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!