பட்டதாரி ஆசிரியர் தேர்வு
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுவது என்பது பலரது வாழ்நாள் கனவு. TNTET Paper-II தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு, அந்த கனவை நனவாக்கும் இறுதி வாயிலாக அமைவதுதான் UG TRB (பட்டதாரி ஆசிரியர்) நியமனத் தேர்வு. இத்தேர்வில் வெற்றி பெறுவது என்பது வெறும் வேலைவாய்ப்பு மட்டுமல்ல, சமூகத்தில் ஒரு கௌரவமான அந்தஸ்தையும், நிலையான வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் ஒரு உன்னத வாய்ப்பாகும்.
ஏன் பட்டதாரி ஆசிரியர் தேர்வு இவ்வளவு முக்கியமானது?
1. அரசுப் பணிக்கான இறுதி நுழைவுவாயில்
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) என்பது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே, அது வேலைக்கான உறுதிமொழி அல்ல. ஆனால், UG TRB என்பது ஒரு நியமனத் தேர்வு (Appointment Exam).
நேரடிப் பணி:
இத்தேர்வில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை (Rank) அடிப்படையில், எந்தவித நேர்காணலும் (Interview) இன்றி நேரடியாக நீங்கள் அரசுப் பணியில் அமர முடியும்.
தகுதிக்கான அங்கீகாரம்:
பல ஆண்டுகாலக் காத்திருப்பு மற்றும் TET தேர்ச்சிக்குப் பிறகு, உங்கள் ஆசிரியர் கனவை நனவாக்கும் ஒரே ஒரு இறுதிப் படி இதுமட்டுமே.
2. Prestigious & Social Impact
ஆசிரியர் பணி என்பது ஒரு வாழ்வியல் அறம். குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியராக இருப்பது சமூகத்தில் மிகப்பெரிய மரியாதையைத் தேடித்தரும்.
எதிர்காலத்தை உருவாக்குதல்:
சமூகத்தின் அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறந்து, அவர்களைச் சிறந்த குடிமக்களாக மாற்றும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அரசு அதிகாரி அந்தஸ்து:
ஒரு பட்டதாரி ஆசிரியராக, நீங்கள் கல்வித் துறையில் ஒரு முக்கியமான அதிகாரியாகவும், சமூக மாற்றத்தை உருவாக்கும் ஒரு ‘மென்டராகவும்’ (Mentor) கருதப்படுவீர்கள்.
3. அசைக்க முடியாத பணி பாதுகாப்பு – ( Job Security)
தனியார் துறைகளில் நிலவும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் அல்லது பணி நீக்கம் போன்ற அச்சங்கள் இங்கு கிடையாது.
நிலையான வருமானம்:
அரசு நிர்ணயித்துள்ள காலமுறை ஊதியம் (Pay Scale), அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) என ஒவ்வொரு மாதமும் ஒரு கௌரவமான ஊதியம் உங்கள் வங்கி கணக்கில் சேரும்.
சலுகைகள்:
மருத்துவக் காப்பீடு (Health Insurance), மகப்பேறு விடுப்பு மற்றும் இதர விடுப்புச் சலுகைகள் என உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை அரசு உறுதி செய்கிறது.
பணி உயர்வு வாய்ப்புகள்:
ஒரு பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேரும்போது, காலப்போக்கில் முதுகலை ஆசிரியர் (PG Assistant) அல்லது பள்ளித் தலைமை ஆசிரியர் (Headmaster) என உயர்பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.
4. வாழ்நாள் லட்சியத்தின் வெற்றி
ஒருவர் பட்டதாரி ஆகி, பி.எட் (B.Ed) முடித்து, டெட் (TET) தேர்விலும் வென்ற பிறகு, அவருடைய லட்சியத்தின் உச்சகட்டமே இந்த UG TRB வெற்றிதான். இது ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல, அவரைச் சார்ந்திருக்கும் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தையும் உறுதி செய்கிறது.
தேர்வு முறை மற்றும் பாடப்பிரிவுகள்
பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தகுதி பெறுபவர்கள், அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாட ஆசிரியர்களாக (Graduate Teachers / BRTE) நியமனம் செய்யப்படுவர். இத்தேர்வு உங்கள் இளங்கலை (UG Degree) பாட அறிவைச் சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயின்ற பாடத்தைப் பொறுத்து பின்வரும் பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறும்:
பட்டதாரி ஆசிரியர் ( Tamil & English):
உங்கள் மேஜர் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
பட்டதாரி கணித ஆசிரியர்:
கணிதப் பாடத்தில் இருந்து விரிவான வினாக்கள்.
பட்டதாரி அறிவியல் ஆசிரியர் (Science):
இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), தாவரவியல் (Botany) அல்லது விலங்கியல் (Zoology) – இதில் நீங்கள் மேஜராகப் பயின்ற பாடத்தில் தேர்வு நடைபெறும்.
பட்டதாரி சமூக அறிவியல் (Social Science) ஆசிரியர்:
வரலாறு (History) அல்லது புவியியல் (Geography) பாடப்பிரிவுகள்.
Why Choose Professor Academy?
எங்கள் அகாடமி மாணவர்களுக்கு வெறும் பாடங்களை மட்டும் நடத்துவதில்லை; அவர்களை ஒரு முழுமையான ஆசிரியராகச் செதுக்குகிறது.
நேரடி கலந்துரையாடல் வகுப்புகள் (Live Interactive Classes):
மாணவர்கள் ஒரு நேரடி வகுப்பறையில் அமர்ந்து படிப்பது போன்ற அதே உணர்வைப் பெறுவதற்காக, எங்கள் பேராசிரியர்கள் பிரத்யேகமான Interactive Live Classes மூலம் பாடங்களை நடத்துகின்றனர். இதன் மூலம், பாடங்களைக் கவனிப்பதோடு மட்டுமின்றி, உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறலாம். நீங்கள் எங்களோடு தொலைவில் இருந்தாலும், ஒரு ஆசிரியரின் அருகாமையில் அமர்ந்து படிப்பது போன்ற நெருக்கமான உணர்வை எங்கள் வகுப்புகள் உங்களுக்கு வழங்கும்.
Recorded வீடியோக்கள் (LMS Access):
நேரடி வகுப்புகளில் பங்கேற்க இயலாத மாணவர்களுக்காகவும், பாடங்களை மீண்டும் மீண்டும் திருப்புதல் (Revision) செய்வதற்காகவும், அனைத்து வகுப்புகளையும் எங்களது LMS பிளாட்ஃபார்மில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதன் மூலம், நீங்கள் தவறவிட்ட வகுப்புகளை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துப் பயன் பெறலாம். 10 அச்சுப் புத்தகங்கள் & PDF மெட்டீரியல்ஸ்: தரமான 10 புத்தகங்கள் உங்கள் வீட்டிற்கே கொரியர் செய்யப்படும். இது ஆஃப்லைன் தயாரிப்பிற்கு (Offline Learning) மிகவும் உதவும்.
Specialized Class Notes (PDF)
எங்கள் அகாடமி மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Specialized Class Notes (PDF) வழங்குகிறோம். பாடத்திட்டத்தின் மிக முக்கியமான பகுதிகளை எளிமையாகவும், ஆழமாகவும் புரிய வைக்கும் வகையில் இந்த நோட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் உங்கள் மொபைல் அல்லது டேப்லெட் மூலம் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி இருப்பதால், பயணத்தின் போதும் அல்லது ஓய்வு நேரங்களிலும் உங்கள் தயாரிப்பைத் தொய்வில்லாமல் தொடர முடியும்.
நிபுணத்துவ ஆசிரியர்கள் (Expert Faculty):
NET/SET மற்றும் TRB அனுபவம் வாய்ந்த தகுதியான பேராசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தொடர் மதிப்பீட்டுத் தேர்வுகள் (Continuous Evaluation):
வெறும் படிப்போடு நிறுத்தாமல், உங்கள் தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எங்களது தொடர் தேர்வு முறை உதவுகிறது. Daily Tests, Unit-wise Test Series மற்றும் Full-length Mock Tests மூலம் உங்கள் பாட அறிவை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். மேலும், எங்களது LMS பிளாட்ஃபார்மில் ‘லீடர் போர்டு’ (Leaderboard) வசதி உள்ளது. இதன் மூலம், உங்களுடன் பயிலும் சக மாணவர்களுடன் ஒரு ஆரோக்கியமான மற்றும் விளையாட்டுத்தனமான போட்டியை (Sportive Competition) வளர்த்துக்கொள்ள முடியும். மற்ற மாணவர்களுடன் உங்கள் தரவரிசையை ஒப்பிட்டுப் பார்ப்பது, உங்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, தேர்வில் வெற்றி பெறத் தேவையான உத்வேகத்தையும் (Motivation) தொடர்ந்து வழங்கும்.
Personalised Mentorship:
வெறும் வகுப்புகள் மற்றும் புத்தகங்களோடு எங்கள் பணி முடிந்துவிடுவதில்லை. Faculty’s பாடங்களைத் தாண்டி, உங்கள் ஒட்டுமொத்தப் பயணத்திலும் உறுதுணையாக இருக்க பிரத்யேகமான கோ-ஆர்டினேட்டர்கள் (Coordinators) உங்களுக்கு வழிகாட்டுவார்கள். உங்கள் தயாரிப்பில் தொய்வு ஏற்படும் நேரங்களிலும், கடினமான தருணங்களிலும் உங்களுக்குத் தோள் கொடுத்துத் தாங்கும் ஒரு தூணாக அவர்கள் செயல்படுவார்கள். மேலும் அவர்கள் உங்கள் முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து (Continuous Monitoring), உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு, எப்போது ஆதரவு தேவைப்பட்டாலும் ஒரு சிறந்த ஊக்கமளிப்பவராக (Best Motivator) அவர்கள் உங்களுடன் இருப்பார்கள். இந்தத் தேர்வில் நீங்கள் வெற்றி பெறும் வரை, உங்கள் நிழலாகத் தொடர்ந்து பயணிப்பதே எங்கள் Coordinator-களின் முதன்மைப் பணி!
நாங்கள் வழங்கும் UG TRB பாடப்பிரிவுகள் (Courses We Offer):
நாங்கள் பின்வரும் அனைத்துப் பாடங்களுக்கும் சிறந்த பயிற்சியை வழங்குகிறோம்:
UG TRB Tamil
UG TRB English
UG TRB Mathematics
UG TRB Physics
UG TRB Chemistry
UG TRB Botany
UG TRB Zoology
UG TRB History
UG TRB Geography
Final Thoughts:
UG TRB தேர்வு என்பது உங்கள் உழைப்பிற்கும், தகுதிக்கும் கிடைக்கப்போகும் அங்கீகாரம். சரியான வழிகாட்டுதலும், முறையான பயிற்சியும் இருந்தால் முதல் முயற்சியிலேயே நீங்கள் அரசு ஆசிரியராக முடியும். உங்கள் அரசுப் பணி கனவை நோக்கி முதல் அடியை எங்களுடன் எடுத்து வையுங்கள்!
To know more about us