UGC NET June 2025 Results are Out! Check Now

Admissions Open for UGC NET 2025 Join Now

PG TRB New Notification Out Check Now

PG TRB Educational Methodology and GK Books are available now! Order Now

BEO Tamil Eligibility Test

Tamil Eligibility Test – A Must for BEO Exam Aspirants

If you are preparing for the Block Educational Officer (BEO) Exam in Tamil Nadu, clearing the Tamil Eligibility Test is a non-negotiable requirement. Conducted under the guidelines of the Teachers Recruitment Board (TRB), this test ensures that candidates possess adequate proficiency in Tamil – an essential skill for effectively serving in educational administrative roles across the state.

Read below the BEO Tamil Eligibility Syllabus

உயர்நிலை – மொழிப்பாடத்திட்டம் – தமிழ்

மொழி மானுடத்தின் அடையாளம்; கருத்துப் பரிமாற்றத்திற்கான ஆற்றல் வாய்ந்த ஊடகம். ஒரு சமுதாயத்தின் அறிவு, பண்பாடு, வரலாறு, தத்துவம் ஆகியவற்றோடு இரண்டறக் கலந்ததாகவும் அவற்றின் கருவூலமாகவும் மொழி விளங்குகிறது. தனி மனிதர் சிந்திக்கவும் படைப்பாக்கத் திறன் பெறவும் மொழியே அடிப்படையாக அமைகிறது.

எல்லாக் குழந்தைகளும் இயல்பூக்கம் காரணமாகத் தாம் வாழும் சூழலில் இருந்தே மொழியறிவைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆயினும், அதனை முறையாகத் திறம்பட வளர்த்தெடுப்பதில் கல்விக்கூடங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

இதன்படி, மாணவர் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகள் தொடக்கநிலையில் (1-5வகுப்புகள்) கட்டமைக்கப்பட்டுள்ளன. அவ்வடிப்படைச் செய்திகள் குறித்த வகைப்பாடுகள், விளக்கங்கள், அவற்றின் வாயிலாக மாணவர் பெற வேண்டிய விழுமியங்கள் போன்றவை உயர் தொடக்க நிலையில் (6-8வகுப்புகள்) தரப்பட்டுள்ளன. சிந்தனையை மேம்படுத்திப் படைப்பாற்றலை வளர்க்கும்வகையில் ஆழம், அகலம், விரிவு கொண்ட செய்திகள், உயர்நிலையில் (9-10வகுப்புகள்) அளிக்கப்பட்டுள்ளன. அறிந்துகொண்ட செய்திகளையும் கருத்துகளையும் அலசி ஆராய்தல், திறனாய்தல், அவை குறித்து விரிவாகச் சிந்தித்தல், படைப்புத் திறனை மேம்படுத்தல், மொழியைப் பயன்பாட்டு அடிப்படையில் அணுகுதல் ஆகியன மேனிலை (11-12வகுப்புகள்) வகுப்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

தொடக்கநிலை (வகுப்பு ஒன்றுமுதல் வகுப்பு ஐந்துவரை), உயர்தொடக்க நிலை (வகுப்பு ஆறுமுதல் வகுப்பு எட்டுவரை) அடிப்படை மொழித்திறன்கள், தகவலறிதல், தொடர்பாடல், மொழியாளுமை, படைப்பு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, சொல்லாக்கம், நடைமுறை இலக்கணம், புத்துலகிற்கான திறன் இவற்றைக் கருத்தில்கொண்டு, உயர்நிலைக்குரிய தமிழ்மொழிப் பாடத்திட்டம் கீழ்க்காணுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழிப் பாடம் கற்பிப்பதன் முக்கிய நோக்கங்கள்

  • மொழியை இலகுவாகக் கையாளவும் அம்மொழிவழியே திறமையுடன் கருத்துகளை வெளிப்படுத்தவும் வழிகாட்டுதல்.
  • மொழியைக் கற்கவும், மொழிவழிப் பிற பாடங்களைக் கற்கவும் அடித்தளம் அமைத்தளித்தல்
  • பல்வேறு இலக்கிய இலக்கண நூலாசிரியர்களின் கருத்தின்வழி மொழியின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளச் செய்தல்.
  • தமிழில் சிந்திக்கவும். சிந்தித்தவற்றைத் தன்னம்பிக்கையுடன் தயக்கமின்றித் தமிழ்மொழியில் வெளிப்படுத்தவும் கற்பித்தல்.
  • தமிழ்மொழி என்பது தகவலுக்கான ஊடகம் மட்டுமன்று; அது பண்பாடு, வாழ்வியல், நாகரிகக் கூறுகளுடன் பின்னிப் பிணைந்த உயிர்ப்புடைய வாழ்வியல்மொழி என்பதை உணரச் செய்தல்.
  • இன்றைய தகவல் தொழில்நுட்பம், ஊடகங்கள், அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிகளில் தமிழ்மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதற்குரிய, கலைச்சொற்களை உருவாக்கவும் உருவாக்கப்பட்ட சொற்களஞ்சியத்தைப் பொருத்தமுறப் பயன்படுத்தவும் பயிற்றுவித்தல்.
  • தமிழ்மொழியைப் பயன்படுத்தும் போதெல்லாம் அதன் தொன்மையை உள்ளுணர்ந்து பெருமித உணர்வுடன் வெளிப்படுத்தப் பள்ளிகளிலும் வகுப்பறைகளிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

உயர்நிலைக் கல்வியின்வழி வளர்க்கப்படும் மொழித்திறன்கள்

கற்றல், இலக்கு நோக்கியது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள், திறன்கள் எனப்படுகின்றன. பள்ளிக் கற்றலின் தொடக்கநிலை 1முதல் 5 வகுப்புகளாகவும், உயர்தொடக்க நிலை 6 முதல் 8 வகுப்புகளாகவும், உயர்நிலை 9 மற்றும் 10 வகுப்புகளாகவும், மேனிலை 11 மற்றும் 12 வகுப்புகளாகவும் வரையறை செய்யப்பட்டு உள்ளன. அவ்வகையில் உயர்நிலையில்,

  • அடிப்படைத் திறன்கள் (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)
  • உயர்நிலைச் சிந்தனைத் திறன்
  • 21ஆம் நூற்றாண்டுத் திறன்/தொழில்நுட்பத் திறன்
  • பண்பியல் திறன்
  • சொல்லாட்சித்திறன்
  • அகராதியைப் பயன்படுத்தும் திறன்

போன்றவை கைவரப் பெற வேண்டும்.

திறன்களின் உட்கூறுகளான.

உரைப்பகுதியை உரிய ஒலிப்புடன் படித்தல், மையக்கருத்தறிதல், விடையளித்தல், குறிப்பெடுத்தல், விவரித்தல். வினா உருவாக்குதல். வினாவிற்கேற்ற

  • மொழி ஆளுமைத்திறன், விவாதம், உரையாடல்களில் பங்கேற்று ஏற்ற இறக்கங்களுடன் பேசுதல், எழுதுதல்.
  • பகுதியைப் படித்துக் கருத்துகளைப் பகுத்தும் தொகுத்தும் வகைப்படுத்தியும் வெளிப்படுத்த அறிதல்.
  • புதிய சொற்கள், பிறமொழிச் சொற்கள், இணைச் சொற்கள் போன்றவற்றை அறிதல்
  • கட்டுரை, கடிதம், விண்ணப்பங்கள் ஆகியவற்றை உரிய வடிவத்தில் எழுதுதல்.
  • நிறுத்தக்குறிகளைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி எழுதுதல்.
  • ஆழ்ந்த படிப்பின்வழிப் பாடப்பகுதிகளையும் அகன்ற படிப்பின்வழித் துணைப்பாடம் முதலிய பிற பகுதிகளையும் தானே கற்க அறிதல்.
  • >இலக்கியங்களின் வழியாக மொழிவழங்கும் பகுதி மற்றும் அது சார்ந்த பகுதி மக்களின் வரலாறு, பண்பாடுகளை அறிதல்.
  • மொழிவழியாகச் சித்தமருத்துவம், விளையாட்டு, இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்ற பல்துறை அறிவைப் பெறுதல்.
  • புதிய சொற்களின் பொருளறிதல், அகரமுதலியைப் பயன்படுத்த அறிதல், சொற்களஞ்சியத்தைப் பெருக்குதல்.
  • உரையாடல், நாடகம் எழுதுதல், நிகழ்ச்சி அறிவிப்புகளை நிரல்படவும் சுவைபடவும் இலக்கிய நயமுணர்ந்தும் கூறுதல், எழுதுதல்.
  • மொழிநயம் அறிதல், அறிந்த மொழிநயத்தைப் பொருத்தமுறப் பயன்படுத்துதல், நயம் பாராட்டுதல் (எ.கா.-உவமைகள், பழமொழிகள், மரபுத் தொடர்கள், ஒருசொல் பலபொருள், பலபொருள் ஒரு சொல்)
  • கதை, கவிதை, கட்டுரை, நாடகம், கடிதம் போன்ற படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் பெறுதல்.
  • சிந்தனைத் திறன் கைவரப்பெறுதல்.
  • மறுப்புத்திறன் அறிதல், மனித உறவுப்பாலத்தைத் தக்க வைக்க ஏற்றவாறு மொழியைப் பொருத்தமுறக் கையாளும் திறன் பெறுதல், உயிர்கள் மீது இரக்கம் கொள்ளுதல், தன்னைப் போலப் பிறரை எண்ணுதல் போன்ற வாழ்வியல் சார்ந்த பண்பியல் கூறுகளை மொழிவழிப் பெறுதல்.

இவை போன்ற தமிழ்மொழிவழிப் பெறும் திறன்கூறுகள் மாணவர்களைச் சென்றடையக் கீழ்க்காணுமாறு பாடத்திட்டத்தில் பாடக்கூறுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி-பாடக்கூறுகளும் பாடநூல் அமைப்பும்

1. உரைநடை

2. செய்யுள் / கவிதை

3. துணைப்பாடம்

4.இலக்கணம், மொழித்திறன்

ஆழ்ந்த படிப்பிற்குரிய உரைநடைப் பகுதி. கட்டுரை, கடிதம், நாடகம், உரையாடல், நேர்காணல், தன்வரலாறு, பயணக்கட்டுரை, உரை, வழக்காடு மன்றம், தலையங்கம், திறனாய்வு போன்ற கட்டுரை வடிவங்களில் பொருண்மைக்கும் மாணவரின் கற்றல் நிலைக்கும் ஏற்றவாறு பொருத்தமுற ஐந்து முதல் ஏழு பக்கங்களுக்கு மிகாமல் உரைநடை உலகம் என்னும் தலைப்பின்கீழ் பாடங்களாக இடம்பெற்றுள்ளன.

சங்கப்பாடல், நீதிநூல் செய்யுள், காப்பியச் செய்யுள், மறுமலர்ச்சிப் பாடல், புதுக்கவிதை போன்ற வேறுபட்ட கவிதை வடிவங்கள் பொருண்மைக்கு ஏற்றவாறு செய்யுள் பகுதியில் கவிதைப்பேழை என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளன.

துணைப்பாடம் என்னும் பாடக்கூறு, அகன்ற படிப்பிற்குரியது. உயர்நிலை மாணவர்கள், தமிழ்மொழிப் படைப்புகளைத் தாமே தேடித் தேர்ந்து, விருப்புடன் கற்கும் வண்ணம் பாடப்பகுதிகள் இப்பகுதியில் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டுள்ளன. கதை, சிறுகதை, புதினம், கடிதம், நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள், கட்டுரை வடிவங்கள் (பயணக்கட்டுரை, தன்வரலாறு, வருணனைக் கட்டுரை. விளக்கக் கட்டுரை. வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை) பொருண்மைக்கு ஏற்றவகையில் ஆறுபக்கங்களுக்குள் துணைப்பாடங்களாக விரிவானம் என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளன.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி போன்ற மரபிலக்கணப் பகுதிகள் ஆறாம் வகுப்பிலிருந்து படிப்படியாக வளர்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உயர்நிலையில் மாணவரின் புரிதலுக்கு ஏற்ப, பாடப்பகுதியோடு இணைத்து விதிவருமுறையில் கற்பிக்கத் தகுந்த இலக்கணப்பகுதிகள் இடம்பெற்றுள்ளன. மொழியைக் கையாளுதல், மொழிப்பயன்பாடு ஆகியவற்றை ஊக்குவித்து மேம்படுத்தும்வகையில் மொழித்திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இப்பாடக்கூறுகளைக் கற்பிப்பதால் ஏற்படும் கற்றல் விளைவுகள் பின்வருமாறு

செய்யுள் கற்றலின் நோக்கங்களும் திறன்களும்

  • பாடலின் கருத்துணர்தல்
  • கவிதை இன்பத்தை உணர்தல்
  • ஓசை நயம் கூறல் (எ.கா.) எதுகை, மோனை, இயைபு, முரண்
  • பொருட் சுவையறிதல்
  • சொற்சுவையறிதல்
  • உவமை நயம் உணர்தல்
  • சிலேடை நயம் அறிதல்
  • கற்பனைத் திறன் பெறுதல்
  • அழகியலை அறிந்து இன்புறல்
  • படைப்பாற்றலைப் பெறுதல்
  • செய்யுள் கற்பதை விரும்புதல்
  • நாட்டுப்பற்று, மொழிப்பற்று மேம்படுதல்

உரைநடை கற்றலின் நோக்கங்களும் திறன்களும்

  • சொல் மரபை அறிதல்
  • தொடர் மரபை அறிதல்
  • பத்தி மரபை அறிதல்
  • சொல்லாட்சித் திறன் மேம்படல்
  • தொடர்களைப் பிழையின்றிக் கூறவும் எழுதவும் செய்தல்
  • நடைமுறை உரைநடை அமைப்பை அறிதல்.பயன்படுத்தல்
  • மையக்கருத்துணர்தல், அதன்வழி கருத்துவளம் பெறுதல், பெற்ற வளத்தினைப் பயன்படுத்தல்
  • வாய்விட்டுப் படிக்கப் பயிற்சி பெறுதல்
  • வாய்க்குட் படித்தலின்வழி விரைவாகப் படிக்கும் திறன் பெறல்
  • சிந்தனைத்திறன் மேம்படல்
  • மொழியின்மீது ஆர்வம் மிகுதல்

இலக்கணம் கற்றலின் நோக்கங்களும் திறன்களும்

  • இலக்கணத்தின் இன்றியமையாமையை அறிதல்
  • முறையான இலக்கண அறிவு பெறுதல்
  • திருத்தமாகப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் அறிதல்
  • மொழியின் சிறப்பியல்புகளை உணர்ந்து போற்றுதல்
  • இலக்கணத்தில் ஈடுபாடு பெறுதல்
  • கவிதை,பாடல், பா வகைகள் புனையும் திறன் பெறுதல்
  • மொழியாக்கத்திறனை மேம்படுத்திக் கொள்ளல்

துணைப்பாடம் கற்றலின் நோக்கங்களும் திறன்களும்

  • படித்துப் பொருள் உணர்தல்
  • விருப்பமுடன் படித்தல், தேடிக் கற்றல்
  • அகன்ற படிப்பிற்குப் பழகுதல்
  • அகன்ற படிப்பிற்கும் ஆழ்ந்த படிப்பிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்
  • நிறைந்த சொற்களஞ்சியம் பெறுதல்
  • பத்தியைப் படித்துப் பொருளுணர்தல்
  • தகவல் அறிவு பெறுதல்
  • அகராதியைப் பயன்படுத்தும் ஆற்றல் பெறுதல்
  • உயர்நிலைச் சிந்தனைத் திறன்கள் பெறுதல்
  • கதை, துணுக்குகள், செய்திக்கோவை, பயணக்கட்டுரை போன்ற படைப்புகளைப் படைக்கும் திறன் பெறுதல்

மொழிவழி வளர்க்கப்படும் பயன்பாட்டுத் திறன்கள்

எழுத்துகளை, சொற்களை, தொடர்களை வரிசைப்படுத்தி வகைப்படுத்தும் திறனைப் பெறவும், அகராதியில் சொல்தேடிப் பொருள் அறிதலுக்கும் சொற்களை இலக்கிய, இலக்கண அடிப்படையில் பிரித்து அகராதி உருவாக்கலுக்கும் அடிப்படையாக அமைவதால் மாணவர் வகுப்பு நிலைக்கேற்ப வளர்நிலையில் அகராதியைப் பயன்படுத்தும் திறன் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழியின் தொடர் அமைப்பை ஆழ அறிதலுக்கும் பிற மொழியோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்வதற்கும் மொழியைப் பகுத்து உணர்வதற்கும் மொழிபெயர்ப்புத் திறன் இன்றியமையாதது. சொற்களை மொழிபெயர்த்தலில் தொடங்கி தொடர். சிறுபத்தி எனப் படிப்படியாக மாணவர்கள் மொழிபெயர்க்கும் திறனைப் பெறும் வகையில் இத்திறன் அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தகவல் உலகில், இதழியல் துறையில் தமிழறிந்த மாணவர்கள் பிழைத்திருத்தம் மற்றும் தொகுத்தல் போன்ற வேலைவாய்ப்புகளைப் பெறும்வகையில் மெய்ப்புத் திருத்துதலுக்கான பிழை களைதல் திறன் அளிக்கப்பட்டுள்ளது.

மொழிப்பாடத்தின்வழி அளிக்கப்படும் விழுமியங்கள்

தமிழ்மொழிவழியே திறன்கள் மட்டுமல்லாது, தமிழர் வாழ்வியலும் பண்பாட்டுக் கூறுகளும் தொன்மையும் இனிமையும் செம்மையும் செறிவும் மாணவரைச் சென்றடைகின்றன. தமிழ்மொழி அறநெறியையும் அன்பின் விளைவையும் நட்பையும் நேர்மையையும் கொடையையும் நடுவுநிலைமையையும் பன்னெடுங்காலமாக இலக்கியங்கள் வாயிலாக உணர்த்தி வருகின்றது. மொழிப்பாடத்தில் இலக்கியங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கையில் அவை சார்ந்த விழுமியங்களை உணரச்செய்வது, இன்றைய வளரிளம் பருவத் தலைமுறையினருக்கு, குறிப்பாக உயர்நிலையில் கல்வி பெறும் மாணவருக்கு இன்றியமையாத் தேவையாகும்.

இலக்கியங்கள்வழி வாழ்வியல் திறன்களும் பண்பியல் திறன்களும் குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது. தமிழ்மொழிப் பாடத்தைக் கற்பதனால் மாணவர், மொழியைத் திறம்படக் கையாளவும் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளவும் பயன்படுத்தும் மொழியின் பெருமை, வரலாற்றுத் தொன்மை ஆகியவற்றை உணர்ந்து பெருமிதத்துடன் பயன்படுத்தவுமான திறன்களைப் பெறவேண்டும். இத்தகைய உயரிய நோக்கங்களைக் கொண்டு கீழ்க்காண் பொருண்மைகள் அடிப்படையில் உயர்நிலைத் தமிழ்மொழிப் பாடத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது.

பொருண்மைகள்

1. மொழி

2. இயற்கை, சுற்றுச்சூழல்

3. பண்பாடு

4. அறிவியல், தொழில்நுட்பம்

5.கல்வி

6. கலை, அழகியல், புதுமைகள்

7. நாகரிகம், தொழில், வணிகம், நாடு, சமூகம், அரசு,நிருவாகம்

8. அறம், தத்துவம், சிந்தனை

9. மனிதம், ஆளுமை

ஒவ்வொரு பொருண்மையும் ஓர் இயலாக வைக்கப்படும். அதனுள் செய்யுள், உரைநடை, துணைப்பாடம் மற்றும் இலக்கணப் பகுதிகள் இடம்பெறும். செய்யுள் பகுதியில் பழங்கால. இடைக்கால மற்றும் சமகால இலக்கிய வடிவங்கள் பொருண்மைக்குப் பொருத்தமுற அமைக்கப்பெறும். பொருண்மைக்கேற்ற உரைநடைப்பகுதி, வேறுபட்ட வடிவங்களில் ஏழு பக்கங்களுக்கு மிகாமல் அமையும். துணைப்பாடப்பகுதி, பெரும்பான்மையாகப் படைப்பாளிகளின் படைப்புகளாக ஆறு பக்கங்களுக்குள் அமையும். வரையறுக்கப்பட்ட மரபிலக்கணப்பகுதிகள் பாடப்பகுதிகளின் துணைகொண்டு மாணவர்களுக்குப் புரியும்வகையில் விளக்கப்படும். மேலும், இப்பொருண்மைகள் அடிப்படையிலான பாடப்பகுதி அறிதல், புரிதல், பயன்படுத்தல், ஆளுதல் ஆகிய மதிப்பீட்டுக் கூறுகளின்படி கீழ்க்காண் கற்றல் விளைவுகளை மாணவர்களுக்குள் ஏற்படுத்தும்.

பாடப்பகுதிகளும் கற்றல் விளைவுகளும் (பத்தாம் வகுப்பு)

  1. மொழி
பொருண்மைபாடப்பொருள்                கற்றல் நோக்கங்கள்
மொழிஉரைநடை தமிழ்ச்சொல் வளம் குறித்த கட்டுரை செய்யுள் தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும் கவிதைகள் துணைப்பாடம் உரைநடை குறித்த உரையாடல் இலக்கணம் எழுத்து, சொல் இலக்கணம்  ● தமிழ்மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் உரையாற்றுதல்
● மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களைச் சொற்களின் வாயிலாகப் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்
● உரைநடையிலுள்ள அணிநலன்களை உள்வாங்கிக்கொண்டு நயமிகு தொடர்களை உருவாக்கி வெளிப்படுத்துதல்
● மொழி தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரும் நுட்பத்தை அறிந்து பயன்படுத்துதல்
● விதிமுறைகளை அறிந்து புதிய சொற்களை உருவாக்குதல்
  1. இயற்கை, சுற்றுச்சூழல்
பொருண்மைபாடப்பொருள்                கற்றல் நோக்கங்கள்
இயற்கை, சுற்றுச்சூழல்  உரைநடை இயற்கைக் கூறான காற்றின் தன்மைகளைக் குறித்த உரைநடை செய்யுள் காற்றை மையப்படுத்திய சங்ககால, மற்றும் தற்காலக் கவிதைப் பகுதிகள் துணைப்பாடம் காற்றை மையப்படுத்திய கதை இலக்கணம் தொகைநிலைத் தொடர்கள்  ● காற்று மாசுபாடுகுறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வு பெறுதல்
● இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்
● குளிர்கால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன் மொழிப் பயன்பாட்டுத் திறத்தினையும் படித்துச் சுவைத்தல்
● கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும் அது போன்ற படைப்புகளை உருவாக்கவும் முனைதல்
● தொகைநிலைகளின் தன்மைக்கேற்பத் புரிந்துகொண்டு பயன்படுத்துதல் தொடர்களைப்
● எண்ணங்களை விவரித்தும் வருணித்தும் எழுதுதல்
  1. பண்பாடு
பொருண்மைபாடப்பொருள்                கற்றல் நோக்கங்கள்
பண்பாடு  உரைநடை தமிழரின் விருந்தோம்பல் குறித்த உரைநடை செய்யுள் சங்க மற்றும் பிற்கால இலக்கியம் துணைப்பாடம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரக் கதை / வாழ்வியல் இலக்கியம் இலக்கணம் தொகாநிலைத் தொடர்கள்  ● நம் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பை உணர்ந்து பெருமிதத்துடன் பின்பற்றுதல்
● உணவு வகைகளும் உணவு சமைக்கும் முறைகளும் மொழியில் நயம்படச் சொல்லப்படும் முறைமையைப் படித்துச் சுவைத்து அது போல ஈர்ப்புடன் எழுதப்பழகுதல்
● உடலை மட்டும் வளர்க்கும் உணவுகளைத் தவிர்த்தல் குறித்தும், உயிரை உணர்வை வளர்க்கும் உணவுகளைக் குறித்தும் செய்திகளை அறிந்து வெளிப்படுத்துதல்
● சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறைகளை வட்டார இலக்கியங்களின் நடையில் புரிந்து படித்தல்
● மொழிப் பயன்பாட்டில் தொகாநிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
  1. அறிவியல், தொழில்நுட்பம்
பொருண்மைபாடப்பொருள்                கற்றல் நோக்கங்கள்
அறிவியல், தொழில்நுட்பம்உரைநடை இன்றைய உலகின் புதிய தொழில்நுட்பம் குறித்த உரைநடை செய்யுள் சங்ககால மற்றும் பிற்காலப் பாடல்கள் அறிவியல், தொழில்நுட்பம் துணைப்பாடம் அறிவியல் வளர்ச்சிக்குப் இலக்கணம் – பொது வல்லினம் மிகா இடங்கள்● வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பங்கள் நம் மொழியில் திறம்படச் சொல்லப்படும் பாங்கறிந்து மொழித்திறனையும் தொழில்சார் கருத்துகளையும் புதுப்பித்தல்
● அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத் திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாற்றல்
● உரையாடல் வடிவில் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன்பெறுதல்
● இலக்கணப் பிழையற்ற தொடரமைப்புகளைத் தெரிந்துகொண்டு பயன்படுத்துதல்
● பங்காற்றிய ஆளுமை குறித்த உரையாடல்
  1. கல்வி
பொருண்மைபாடப்பொருள்                கற்றல் நோக்கங்கள்
கல்விஉரைநடை மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையை உணர்த்தும் கட்டுரை செய்யுள் கல்வியின் சிறப்புணர்த்தும் இடைக்காலச் செய்யுள்கள் துணைப்பாடம் படிப்பதன் தேவையை உணர்த்தும் கதைப்பகுதி இலக்கணம் வினா, விடை வகை, பொருள்கோள்● மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையையும் நுட்பத்தையும் உணர்ந்து மொழிபெயர்ப்புப் பகுதிகளைப் படித்தல், புதிய பகுதிகளைத் தேவைக்கேற்ப மொழிபெயர்த்தல்
● கல்வி சார்ந்த கருத்துகளைச் செய்யுள் வாயிலாக அறியவும் சுவைக்கவும் இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்
● படித்துப் பொருள் உணர்வதுடன் கருத்துகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி எளிமையாக வழங்கும் திறன் பெறுதல்
● பொருள்கொள்ளும் முறையறிந்து செய்யுளின் பொருளைப் புரிந்துகொள்ளுதல்
  1. கலை, அழகியல், புதுமைகள்
பொருண்மைபாடப்பொருள்                கற்றல் நோக்கங்கள்
கலை, அழகியல், புதுமைகள்உரைநடை கற்றல் நோக்கங்கள் சிறப்பை உணர்த்தும் உரைநடை செய்யுள் கலை,அழகி கலை, அழகியலை வெளிப்படுத்தும் புராணம், சிற்றிலக்கியம் மற்றும் புதுக்கவிதை துணைப்பாடம் நாட்டுப்புறக் கலை மற்றும் கலைஞர்கள் குறித்த கதை இலக்கணம் -அகப்பொருள் இலக்கணம்● தமிழர் நிகழ்த்து கலைகளின்
● தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மையறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச் செய்யவும் தங்களின் பங்களிப்பை நல்குதல்
● எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப்பொருளாகும் திறமறிந்து தானே கற்றல்
● கவிநயம் நனிசொட்டச்சொட்டப் பாடப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன் அவை போன்ற பாடல்களைத் தேடித்தேர்ந்து படித்தல் மற்றும் படைத்தல்
● சந்த நயமும் தொடைநயமும் கொண்ட பாடல்கள் மனனத்திற்கு வழிகாட்டுபவை என்பதை அறிந்து நா நெகிழ், நாபிறழ் பயிற்சிகளில் ஆற்றல் பெறுதல்
● கதைகளைப் படித்து மையக் கருத்துணர்தல், கதை குறித்துக் கலந்துரையாடல்
● பொருளிலக்கணத்தில் அகப்பொருள் பெறும் இடமறிந்து அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன் பெறுதல்
  1. நாகரிகம், தொழில், வணிகம், நாடு, சமூகம், அரசு,நிருவாகம்
பொருண்மைபாடப்பொருள்                கற்றல் நோக்கங்கள்
நாகரிகம், தொழில், வணிகம், நாடு, சமூகம், அரசு, நிருவாகம்உரைநடை சமூக அக்கறை கொண்ட ஒருவரின் தன்வரலாறு செய்யுள் பண்டை வணிகத்தைப் படம்பிடித்துக் காட்டும் காப்பியம், நாடு, நிருவாகச் சிறப்பு கூறும் மெய்க்கீர்த்தி, தொழில் சிறப்பு கூறும் புதுக்கவிதை துணைப்பாடம் சமூகத்திற்குத் தங்கள் பங்களிப்பை சிறப்புற நல்கியவர்கள் குறித்த கட்டுரை இலக்கணம் புறப்பொருள் இலக்கணம்  ● தன்வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து அதுபோல எழுத முற்படுதல்
● நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்
● காப்பியம், மெய்க்கீர்த்தி ஆகிய இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மைகளுடன் படித்துச் சுவைத்தல்
● தமிழ்ப் புறத்திணைப் பகுப்பின் நுட்பத்தை அறிந்து தமிழரின் போர்முறைகளைப் புரிந்து கொள்ளுதல்.
  1. அறம், தத்துவம், சிந்தனை
பொருண்மைபாடப்பொருள்                கற்றல் நோக்கங்கள்
  அறம், தத்துவம், சிந்தனைஉரைநடை பண்டைய தமிழர்களின் அறக்கருத்துகளை உணர்த்தும் கட்டுரை செய்யுள் தத்துவம் மற்றும் சிந்தனைக் கருத்துகளைக் கொண்ட புதுக்கவிதைகள் துணைப்பாடம் ஞானி ஒருவர் குறித்த நாடகம் இலக்கணம் பா வகை, அலகிடுதல்  ● அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியங்களின் மையப்பொருளறிதல்
● கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்புகும் கருத்தினை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல் வலுவாகப்
● தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள் வழி உணர்ந்து சுவைத்தல்
● தமிழின் நான்கு பாவகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்.
  1. மனிதம், ஆளுமை
பொருண்மைபாடப்பொருள்                கற்றல் நோக்கங்கள்
  மனிதம், ஆளுமை  உரைநடை ஆளுமை குறித்த நினைவு இதழ் வடிவம் செய்யுள் மனிதத்தை உணர்த்தும் பிற்காலக் காப்பியம், புதுக்கவிதை துணைப்பாடம் மனிதத்தை வெளிப்படுத்தும் சிறுகதை இலக்கணம் அணிகள்  ● ஓர் ஆளுமையை மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து
● முறைப்படுத்திச் சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்
● மாற்றுச் சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து, அதுபோன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்
● மனித மாண்புகளையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல்
● நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படிக்கவும் எழுதவும் பழகுதல்
● அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புபடுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்

Enrol Now At:

Contact: +91 7070701005 / + 91 7070701009

Email: Enquiry@professoracademy.com

Hi!

ProfHoot