UGC NET June 2025 Results are Out! Check Now

Admissions Open for UGC NET 2025 Join Now

PG TRB New Notification Out Check Now

PG TRB Educational Methodology and GK Books are available now! Order Now

UGC NET Tamil

Begin your academic journey with confidence by understanding the complete UGC NET Tamil syllabus, your foundation for clearing NET or securing a JRF. 

The syllabus encompasses classical and modern Tamil literature, grammar, literary theories, and critical analysis—aligned with the latest NTA guidelines. 

At Professor Academy, we offer expert-led online coaching to help you master each unit with clarity and cultural depth. 

A strong grip on the syllabus helps you focus on scoring sections and build exam confidence. 

UGC NET Tamil Syllabus

பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு- தேசிய நுழைவுத்தேர்வுக்கான

தமிழ்ப் பாடத்திட்டம்

இப்பாடத்திட்டம் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களை உள்வாங்கிக்கொண்டு

அ] தமிழ் இலக்கியப்பகுதிகள்

ஆ] தமிழ் இலக்கணப்பகுதிகள்

இ] தமிழ்த் திறனாய்வுகள்

ஈ ] தமிழக வரலாறும் பண்பாடும்

உ] தமிழும் பிறதுறைகளும்

·   என ஐந்து முதன்மைப்பகுதிகளை அடையாளப்படுத்திக்கொண்டு, ஒவ்வொரு பகுதிகளின் பரப்பளவுக்கேற்ப 10 அலகுகளில் முழுமையாக்கித் தந்துள்ளது. பாடத்திட்டம் தயாரிக்கப்படும் காலத்தில் அதற்குரிய சமகாலத் தன்மைகொண்டதாக மாற்றியமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலகுகளிலிருந்தும் சம அளவு வினாக்கள் அமையவேண்டும்.

அலகு:1. பழந்தமிழ் இலக்கியங்கள்

·   எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள்.

·   பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.

இவை குறித்தப் பொதுநிலை அறிவாக இலக்கிய வரலாற்றுத் தரவுகளான காலம், தொகுப்புமுறை, ஆசிரியர் வரலாறு, முதன்மையான பாடுபொருள், அவற்றிற்கு உரையெழுதியோர், அவர்கள் முன்வைத்துள்ள பொதுக் குறிப்புகள் போன்றன கவனம்பெறும்.

அலகு:2. காப்பியங்கள்

·   பெருங்காப்பியங்கள் , சிறுகாப்பியங்கள்,

·   பிற்காலக்காப்பியங்கள் – கம்பராமாயணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், வில்லிபாரதம், பெருங்கதை, நளவெண்பா, தேம்பாவணி, இரட்சணியயாத்திரிகம், சீறாப்புராணம், இயேசுகாவியம், நாயகம் ஒரு காவியம், இராவணகாவியம்.

அலகு:3. பக்தி இலக்கியங்கள்,சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள்

·   பன்னிரு திருமுறைகள்

·   நாலாயிர திவ்வியபிரபந்தம்

·   சித்தர் பாடல்கள், அருணகிரிநாதர், தாயுமானவர், வள்ளலார்

·   குணங்குடி மஸ்தான் சாகிபு

·   சிற்றிலக்கிய வகைகள்

·   தனிப்பாடல் திரட்டு

·   இலக்கிய உரையாசிரியர்கள்: அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், திருக்குறள் பழைய உரையாசிரியர்கள், நாதமுனி, சிவஞானமுனிவர், பண்டிதமணி மு. கதிரேசனார், ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார், பின்னத்தூர் நாராயணசாமி அய்யங்கார், வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், உ.வே.சாமிநாதய்யர், சி.வை தாமோதரம்பிள்ளை, புலவர் குழந்தை, சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார். கவி.கா.மு.ஷெரீப்

அலகு:4. இக்கால இலக்கியங்கள்

·   தேசிய இயக்கப்பின்னணியில் பாரதியார், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, நாமக்கல் வெ.இராமலிங்கம்பிள்ளை, சுத்தானந்த பாரதியார் – திராவிட இயக்கப் பின்னணியில் பாரதிதாசன், முடியரசன், சுரதா – பொதுவுடைமை நோக்கில் தமிழ் ஒளி, தணிகைச் செல்வன், பரிணாமன்.

·   திரைப்படப் பாடலாசிரியர்கள் – பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயணகவி, கவி.கா.மு.ஷெரீப், கண்ணதாசன், மருதகாசி, வாலி, வைரமுத்து, அறிவுமதி, நா.முத்துக்குமார், பா.விஜய், தாமரை,

·   அகவயத் தேடலைக் கவிதைகளாக்கிய போக்கு : ந.பிச்சமூர்த்தி, மயன், பசுவய்யா, அபி, அப்துல் ரகுமான், ஞானக்கூத்தன், பிரமிள், ஆத்மநாம், சுகுமாரன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன். யவனிகா ஸீராம், என்.டி.ராஜ்குமார் – புறநிலையை விமரிசனப்போக்கு: நா.காமராசன்,

மு.மேத்தா, சிற்பி, மீரா, புவியரசு, தமிழன்பன், தமிழ்நாடன், இன்குலாப், ஹெச்.ஜி.ரசூல் – மண்சார் கவிதைகள்: பழமலய், கலாப்ரியா, கல்யாண்ஜி, தமிழச்சி தங்கபாண்டியன் – பெண்ணிய வெளிப்பாட்டுக்கவிகள்: இரா.மீனாட்சி, வைகைச்செல்வி, சல்மா, கனிமொழி, உமா மகேஸ்வரி, சுகிர்தராணி, சக்திஜோதி, இளம்பிறை, புதிய மாதவி.

·   ஹைகூ,சென்ட்ரியூ, லிமரிக், லிமரைக்கூ, கஜல், போன்சாய் கவிதைகள்

·   சிறுகதைகள்: வ.வே.சு. அய்யர், புதுமைப்பித்தன்,மௌனி,லா.ச.ராமாம்ருதம், பி.எஸ்.ராமையா, கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், கு.ப.ராஜகோபாலன், விந்தன், அகிலன், வண்ணதாசன், அஷ்வகோஷ், ஜெயந்தன், மா.அரங்கநாதன், அம்பை, ஆர். சூடாமணி, கந்தர்வன், தமிழ்ச்செல்வன், பா.செயப்பிரகாசம், பாவண்ணன், கோணங்கி ஆகியோர் படைப்புகள்.

·   புதினங்கள்: மாயூரம் வேதநாயகம்பிள்ளை, இராஜம் அய்யர், அ.மாதவையா , கல்கி, மு.வரதராசன், க.நா.சுப்பிரமண்யன், ஆர். சண்முகசுந்தரம், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், சா. கந்தசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், நீல. பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், நாஞ்சில் நாடன், தோப்பில் முகம்மது மீரான், திலகவதி, பிரபஞ்சன், பூமணி, பொன்னீலன், சு.சமுத்திரம், டி.செல்வராஜ், வண்ணநிலவன், மேலாண்மை பொன்னுசாமி, சிவகாமி, இமையம், தஞ்சை ப்ரகாஷ், கீரனூர் ஜாகீர்ராஜா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பாமா, சோ.தர்மன், ஜோ.டி. குரூஸ், ஆகியோர் படைப்புகள்- சாகித்திய அகாடெமி, யுவபுரஸ்கார் விருதுகள் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள்.

·   நாடகங்கள் – மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தமுதலியார், சி.என். அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி, பி.எஸ். ராமையா, ஆர்.எஸ்.மனோகர், சோ.ராமசாமி, கோமல் சுவாமிநாதன், மெரினா, அறந்தை நாராயணன், சுஜாதா. நவீனத்துவ நாடகப் பிரதிகள் : இந்திரா பார்த்தசாரதி, ஜெயந்தன். நவீன நாடக இயக்கங்கள் : கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, நிஜநாடக இயக்கம் மு.ராமசுவாமி, பரிச்ஷா ஞாநி – சபா நாடகங்கள்- நாட்டார் கலைகளும் நவீனநாடக உருவாக்கமும் சே.ராமானுஜம், இரா.இராசு, கே.ஏ.குணசேகரன், கருஞ்சுழி ஆறுமுகம், வேலு.சரவணன்,ச. முருகபூபதி.

·   அயலகத் தமிழ் இலக்கியங்கள் – இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம்பெயர்வு படைப்பாளர்களும் படைப்புகளும்

·   உரைநடை வளர்ச்சியின் வகைகள், ஆளுமைகள் : மறைமலை அடிகள், திரு.வி.க., வ.ரா., மயிலை சீனி.வேங்கடசாமி, ரா.பி.சேதுப்பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, ஈ.வெ.ரா.

·   தன் வரலாறுகள்: வ.உ.சி., உ.வே.சா., திரு.வி.க., நாமக்கல் கவிஞர், நெ.து.சுந்தரவடிவேலு, கலைஞர் மு.கருணாநிதி, அப்துல் கலாம்.

·   பயண இலக்கியங்கள்: ஏ.கே.செட்டியார், சோமலெ, மீ.ப.சோமு. சி.சுப்பிரமணியம், மணியன்.

·   வாழ்க்கை வரலாறுகள் : வ.ரா. எழுதிய பாரதியார், தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு, சுந்தா எழுதிய பொன்னியின் செல்வன், சிற்பியெழுதிய இராமானுசர் வரலாறு, பொன்னீலன் எழுதிய குன்றக்குடி அடிகளார்.

·   கடித இலக்கியங்கள்: மறைமலை அடிகள், வ.சுப.மாணிக்கம், சி.என். அண்ணாதுரை,

·   மொழிபெயர்ப்புகள்: தமிழுக்கு மொழிபெயர்த்தவர்கள்- ஆண்ட்ரிக் ஆண்ட்ரிஸ், சுத்தானந்த பாரதி, கா.ஸீ.ஸீ., த.நா, குமாரசாமி, த.நா.சேனாதிபதி, சி.ஏ.பாலன், சரஸ்வதி ராம்நாத், தி.ப.சித்திலங்கையா, அ.அ.மணவாளன், பி. எஸ். எஸ். சாஸ்திரி, மு.கு.ஜகந்நாதராஜா, நா.தர்மராஜ், நெல்லை எஸ்.வேலாயுதம், எத்திராஜுலு, வெ.ஸ்ரீராம், மணவை முஸ்தபா, தியாகு, பாவண்ணன், இந்திரன், ஆனந்தகுமார், சிற்பி, சுகுமாரன், புவியரசு, ரவிக்குமார், குளச்சல் யூசுப், சா.தேவதாஸ், எம்.எ. சுசிலா, ஜி.குப்புசாமி, அகிலன் எத்திராஜ்.

·   தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு : ஏ.கே.ராமானுஜன், கா.செல்லப்பன், கபில் சுவலபில், ம.லெ.தங்கப்பா. அ.தட்சிணாமூர்த்தி, ஜார்ஜ் எல்.ஹார்ட், லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், ப.மருதநாயகம், வைதேகி ஹெர்பர்ட். கே.எஸ். சுப்பிரமணியன், சரஸ்வதிராம்நாத், நாகரத்தினம் கிருஷ்ணா, க.வாசுதேவன்

அலகு:5 இலக்கணங்கள் :

·   எழுத்திலக்கணமும் கோட்பாடுகளும் – தொல்காப்பியம், நன்னூல்,

·   சொல்லிலக்கணமும் கோட்பாடுகளும் – தொல்காப்பியம், நன்னூல்,

·   பொருள் இலக்கணமும் கோட்பாடுகளும் – அகம்: (தொல்காப்பியம், இறையனார் களவியல், நம்பியகப்பொருள்) புறம்: (தொல்காப்பியம்புறத்திணையியல், புறப்பொருள் வெண்பாமாலை)

·   யாப்பிலக்கணமும் கோட்பாடும் – தொல்காப்பியச் செய்யுளியல், யாப்பருங்கலக்காரிகை

·   அணி இலக்கணமும் கோட்பாடும் – தொல்காப்பிய உவமையியல், தண்டியலங்காரம்

·   பாட்டியல் இலக்கணம் – பன்னிரு பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், வெண்பாப் பாட்டியல், பிரபந்த தீபிகை, பிரபந்த மரபியல்

அலகு 6. இலக்கண உரையாசிரியர்கள், மொழிவரலாறு, நோக்கு நூல்கள்.

·   இலக்கண உரையாசிரியர்கள்: இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், பேராசிரியர்,தெய்வச்சிலையார்,கல்லாடர், மயிலைநாதர், சிவஞான முனிவர், ஆறுமுகநாவலர், சங்கரநமச்சிவாயர், விசாகப்பெருமாள் அய்யர், க.வெள்ளைவாரணர், ஆ.சிவலிங்கனார், பாவலேரேறு ச.பாலசுந்தரனார்.

·   மொழியியல் பார்வையோடு எழுதப்பெற்றுள்ள மொழி வரலாறு மற்றும் இலக்கண நூல்கள் : ராபர்ட் கால்டுவெல், தெ.பொ.மீனாட்சிசுந்தரன், வ.அய்.சுப்பிரமணியன், ச.அகத்தியலிங்கம், கு.பரமசிவம், முத்துச்சண்முகன், எம்.ஏ, நுஃமான், செ.வை. சண்முகம், பொற்கோ.

·   நிகண்டுகள் – அகராதிகள், சொற்களஞ்சியங்கள், பொருட்களஞ்சியங்கள், அடைவுகள் (சொல், பொருள், தொடர்,)

அலகு:7 . இலக்கியத்திறனாய்வு

·   இலக்கியக்கலை, இலக்கியத்திறன், இலக்கியமரபு, இலக்கியத்திறனாய்வியல், திறனாய்வுக்கலை, இலக்கியக்கொள்கைகள், ஒப்பிலக்கியக்கொள்கைகள் போன்றவற்றை அறிமுகம் செய்த நூல்கள்.

·   திறனாய்வு முறைகள்: ரசனை முறை, மதிப்பீட்டுமுறை, அழகியல் முறை, விளக்கமுறை, பகுப்புமுறை, வரலாற்றுமுறை, உருவவியல், மனப்பதிவுமுறை,

·   இலக்கிய இயக்கங்கள்: செவ்வியல்வாதம், புனைவியல்வாதம், இயற்பண்பியல்வாதம், நடப்பியல் வாதம் – நடப்பியல் அல்லாத இலக்கிய இயக்கங்கள்: இருத்தலியல், குறியீட்டியல், மிகையதார்த்தவியல், படிமவியல், வெளிப்பாட்டியல், மனப்பதிவியல், குரூரவியல் ஆகியன.

·   திறனாய்வு அணுகுமுறைகள்: சமுதாயவியல், மார்க்சியவியல், உளவியல், தொல்படிமவியல், மானிடவியல், உருவவியல், இனவரைவியல், அமைப்பியல், தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றின் அடிப்படைகள்.

·   கல்விப்புல ஆய்வு முறையியல்சார்ந்த இலக்கியத்திறனாய்வாளர்கள்: ஆ.முத்துசிவன், எஸ். வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரன், அ.ச.ஞானசம்பந்தன், மு.வரதராசன், வ.சுப.மாணிக்கம், க.ப. அறவாணன் , த.வே.வீராசாமி, ச.வே.சுப்பிரமணியன், எழில் முதல்வன், தமிழண்ணல், பெ. மாதையன், குளோரியா சுந்தரமதி.

·   கல்விப்புல ஆய்வு முறையியல்சாரா இலக்கியத்திறனாய் வாளர்கள் : வ.வே.சு. அய்யர், டி.கே.சி., க.நா.சுப்பிரமணியன், தொ.மு.சி.ரகுநாதன், சி.சு.செல்லப்பா, வெங்கட்சாமிநாதன், நா.வானமாமலை, கோவை ஞானி, அ.மார்க்ஸ், தமிழவன், கோ.கேசவன், ராஜ் கௌதமன், ரவிக்குமார், தி.சு. நடராசன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.எ. நுஃமான் சி.கனகசாபாதி, க.பஞ்சாங்கம்.

அலகு:8. தமிழக வரலாறு

·   தமிழகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் எழுதுவதற்குப் பயன்படும் அடிப்படை நூல்களையும் தரவுகளையும் அறிவது- தமிழ்நாட்டுப்பாட நூல் நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்கள் அடிப்படை நூல்களாக அமையும். கே.கே.பிள்ளை தமிழக வரலாறும் பண்பாடும், க.சுப்பிரமணியன், ந.சுப்பிரமணியன் ஆகியோரின் சங்ககால வரலாறுகள், மா. இராசமாணிக்கனார் – பல்லவர் வரலாறு, தி.வை. சதாசிவபண்டாரத்தார், பி.நீலகண்டசாஸ்திரி, ஆகியோரின் சோழர்கால வரலாறு, சத்தியநாதய்யரின் நாயக்கர் வரலாறு, கு.ராஜய்யன் இக்கால வரலாறு. சங்ககாலம் தொடங்கிச் சமகாலம் வரையிலான தமிழக வரலாற்றுப்பொதுப்பார்வை.

அலகு: 9 தமிழகப்பண்பாடு

·   தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், தமிழர் இசை, கட்டடக்கலை, சுவடியியல்,

·   நாட்டுப்புறவியல் – பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், சடங்குகள், நாட்டார் நடனங்கள், நாடகங்கள்- வழிபாடுகள், திருவிழாக்கள், பெருங்கோயில் பண்பாடு, நகர்சார் பண்பாடு, உள்ளூர்ப்பண்பாடு, பண்பாட்டு நோக்கில் பண்டைய நகரங்களும் நவீன நகரங்களும் நாட்டுப்புற ஆய்வுகளும் ஆய்வாளர்களும்.

·   செ.வைத்தியலிங்கம் தமிழர் பண்பாட்டு வரலாறு – மயிலை சீனி வேங்கடசாமியின் தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் -அயல்நாட்டார் குறிப்புகள் .

அலகு.10. தமிழும் பிறதுறைகளும்

·   தமிழ் ஊடகங்கள்- நாளிதழ் மற்றும் பருவ இதழ்களான அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள், திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி, கணினித்தமிழ்,

·   இணையத்தமிழ்ப் பயன்பாடு: இணைய வலைத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல், கட்செவி போன்றன – பேச்சுத்தமிழ் இலக்கணம். மேடைகளில் தமிழ்ப் பயன்பாடும் சிக்கல்களும்.

·   பிற அறிவுத்துறைகளில் தமிழ் வளர்ச்சி

Download UGC NET Tamil Syllabus

Enroll Us For UGC NET Tamil Syllabus:

Enrol Now: https://professoracademy.com/courses/ugc-net-tamil/

Contact Us:  +91 7070701005 / 7070701009

EMail:  Enquiry@professoracademy.com

Professor Academy – Your Path to UGC NET Success Begins Here!

Hi!

ProfHoot