UG TRB Tamil

  • தொடங்கும் நாள்: 10 மார்ச் 2026
  • பயிற்சி காலம்: 5 மாதங்கள்
  • வகுப்பு செல்லுபடியாகும் காலம் (Validity): UG TRB தேர்வு நாள் வரை
  • பயிற்றுவிக்கும் முறை: எங்களின் கற்றல் செயலி (Learning App) வாயிலாக நடைபெறும் நேரலை வகுப்புகள் (Live Classes) மற்றும் பதிவு செய்யப்பட்ட (Recorded) வகுப்புகள்
  • பயிற்றுவிக்கும் மொழி: தமிழ்
  • வகுப்பு நேரம்: காலை நேரப் பிரிவு (Morning Batch) – காலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை
    (வகுப்பு நேரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை)
  • அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள்: இந்தப் பாடத்திட்டத்தில் புத்தகங்கள் வழங்கப்படாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Original price was: ₹12,999.00.Current price is: ₹8,999.00.

Description

The app provides

Strengthen your preparation with our 120+ UG TRB Tamil Test Series, created to match the real exam environment.

You will receive

Study Materials

UG TRB Tamil Study materials

Fees

UG TRB Tamil Course Fee – Without Books

அசல் கட்டணம்: ₹12,999

சலுகை விலை: ₹8,999 மட்டும்!

Success Stories

Learner Testimonials

Frequently Asked Questions

UG TRB தேர்வு என்றால் என்ன?

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை (Graduate Teachers / BT Assistants / BRTE) நியமிப்பதற்காக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TN TRB) நடத்தப்படும் மாநில அளவிலான ஒரு போட்டித் தேர்வாகும். TNTET தாள்-II (Paper–II) தகுதி பெற்றவர்கள் நிரந்தர அரசு ஆசிரியர் பணியைப் பெற இதுவே இறுதித் தேர்வாகும்.

இந்தத் தேர்வை தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்துகிறது.

பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher) மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் (BRTE) பணியிடங்கள் பின்வரும் பாடங்களுக்கு நிரப்பப்படுகின்றன:

  • தமிழ், ஆங்கிலம், கணிதம்
  • அறிவியல் (இயற்பியல் / வேதியியல் / தாவரவியல் / விலங்கியல்)
  • சமூக அறிவியல் (வரலாறு / புவியியல்)
  • TNTET தாள்-II தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது அரசு வேலைக்கான இறுதி வாசல்.
  • இது பாதுகாப்பான, நிரந்தரமான தமிழக அரசுப் பணியை வழங்குகிறது.
  • நிலையான ஊதியம், ஓய்வூதிய பலன்கள் மற்றும் தலைமை ஆசிரியர் வரை பதவி உயர்வு பெற வாய்ப்பளிக்கிறது.

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  • கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டம் (UG) + B.Ed. அல்லது இளங்கலை பட்டம் + ஈராண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (D.El.Ed).
  • கூடுதல் தகுதி: கண்டிப்பாக TNTET தாள்-II (Paper–II) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பொதுப் பிரிவு (General Category): அதிகபட்சம் 53 வயது.
  • இடஒதுக்கீடு பிரிவினர் (SC/ST/BC/MBC/DNC/DW): அதிகபட்சம் 58 வயது.

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  • பகுதி அ – கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு: (50 மதிப்பெண்கள் | 30 வினாக்கள் | 30 நிமிடங்கள்). இதில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் (40%) பெறுவது கட்டாயம்.
  • பகுதி ஆ – முதன்மைப் பாடத் தேர்வு: (150 மதிப்பெண்கள் | 150 வினாக்கள் | 3 மணி நேரம்). இது உங்கள் இளங்கலைப் பாடத்தின் அடிப்படையில் அமையும்.
  • பகுதி இ – சான்றிதழ் சரிபார்ப்பு: கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தகுதிகளைச் சரிபார்த்தல்.
நீங்கள் இளங்கலையில் எந்தப் பாடத்தைப் படித்தீர்களோ, அந்தப் பாடத்திலிருந்து மட்டுமே 150 வினாக்கள் கேட்கப்படும். (உதாரணம்: கணிதப் பட்டதாரிகளுக்கு கணிதப் பாடத்தில் இருந்து மட்டுமே வினாக்கள் அமையும்).
  • ஊதிய நிலை (Level-16): ₹36,400 – ₹1,15,700.
  • தோராயமான கைநிறையச் சம்பளம்: மாதம் ₹55,000 முதல் ₹60,000 வரை (இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர படிகளும் அடங்கும்).
  • பட்டதாரி ஆசிரியர் (6-8 வகுப்புகள்).
  • 9-10 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர் பதவி உயர்வு.
  • தலைமை ஆசிரியர் (Headmaster) மற்றும் நிர்வாகப் பொறுப்புகள்.

ஆம். இது பள்ளி கல்வித் துறையின் கீழ் வழங்கப்படக்கூடிய நிரந்தரமான தமிழக அரசுப் பணியாகும்.

  • பொதுப் பிரிவு: 40% (60 மதிப்பெண்கள்).
  • இடஒதுக்கீடு பிரிவினர்: 30% (45 மதிப்பெண்கள்).
  • தமிழ் தகுதித் தேர்வு: 40% (20/50 மதிப்பெண்கள்).
UG TRB Tamil ஆன்லைன் பயிற்சியின் கட்டணம் எவ்வளவு?
ஆன்லைன் வகுப்பிற்கான வழக்கமான கட்டணம் ₹12,999 ஆகும். தற்போது சலுகை விலையாக ₹8,999-க்கு மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம் (இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே).
அடுத்த புதிய UG TRB Tamil ஆன்லைன் பயிற்சி வரும் பிப்ரவரி 8, 2026 அன்று தொடங்க உள்ளது.
Professor Academy அதிகாரப்பூர்வ செயலி வழியாக மட்டுமே கட்டணத்தைச் செலுத்த முடியும்:
மாணவர்கள் முழு கட்டணத்தையோ அல்லது தவணை முறையையோ தேர்வு செய்யலாம்.
  • முழு கட்டணம்: ₹8,999
  • தவணை முறை (மொத்தம் ₹9,200):
    • முதல் தவணை: ₹2,000 (இதைச் செலுத்தி உடனடியாகப் பயிற்சியைத் தொடங்கலாம்)
    • இரண்டாம் தவணை: ₹3,600
    • மூன்றாம் தவணை: ₹3,600
ஒவ்வொரு தவணைக்கும் இடையே 30 நாட்கள் கால இடைவெளி வழங்கப்படும். இது மாணவர்கள் சுலபமாகத் தவணைகளைச் செலுத்த உதவும்.

காலை நேர பேட்ச்: அதிகாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை.

ஆம், ஒவ்வொரு நேரடி வகுப்பும் பதிவு செய்யப்பட்டு செயலியில் பதிவேற்றப்படும். தேர்வு முடியும் வரை நீங்கள் இந்த UG TRB Tamil வீடியோக்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துத் திருப்புதல் (Revision) செய்துகொள்ளலாம்.
ஆம், மாணவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க எளிதான தவணை முறை வசதி (Instalment Facility) வழங்கப்படுகிறது.
அனைத்துத் தேர்வுகளும் எங்களது மொபைல் செயலி வழியாகவே நடைபெறும். UG TRB Tamil தேர்வுத் தொடரில் (Test Series) 200-க்கும் மேற்பட்ட தேர்வுகள் உள்ளன:
  • தினசரி பயிற்சித் தேர்வுகள் (Daily Practice Tests).
  • வாராந்திர மற்றும் அலகு வாரியான தேர்வுகள் (Unit Tests).
  • TRB முறைப்படியான முழு மாதிரித் தேர்வுகள் (Mock Exams).
  • ஒவ்வொரு தேர்விற்கும் உடனடி மதிப்பெண் மற்றும் விரிவான ஆய்வு அறிக்கை வழங்கப்படும்.
அச்சுப் புத்தகங்கள் (Printed Books) வழங்கப்படாது. அதற்குப் பதிலாக:
  • டிஜிட்டல் பாடக்குறிப்புகள் (Digital Materials).
  • வகுப்பு வாரியான PDF குறிப்புகள் (இவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்).
ஆம், கட்டணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டவுடன், அதற்கான ரசீது (Invoice) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
நிச்சயமாக! Professor Academy யில் ஏற்கனவே பயின்ற மாணவர்களுக்குப் பிரத்யேகக் கட்டணச் சலுகைகள் உண்டு. இது குறித்த விவரங்களுக்கு எங்களது சேர்க்கை குழுவைத் தொடர்பு கொள்ளவும்.
ஆம், பாடக்குறிப்புகளின் தரத்தைச் சரிபார்க்க மாதிரிப் பாடக்குறிப்புகள் வழங்கப்படுகின்றன.
  • மாதிரி வகுப்பு: YouTube லிங்க் இங்கே
  • மாதிரித் தேர்வு: தற்போது மாதிரித் தேர்வு வசதி இல்லை.
ஆம், UG TRB Tamil பயிற்சியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் ‘தமிழ் தகுதித் தேர்வு’ (Tamil Eligibility Test) வீடியோக்கள் இலவசமாக வழங்கப்படும்.
நீங்கள் அதிகபட்சமாக 3 சாதனங்களில் (உதாரணமாக மொபைல், டேப்லெட், கணினி) லாக்-இன் செய்துகொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால் கணக்கு முடக்கப்பட வாய்ப்புள்ளது.
  • வீடியோக்கள் மற்றும் ஆன்லைன் தேர்வுகளைத் தரவிறக்கம் செய்ய முடியாது.
  • பி.டி.எஃப் (PDF) பாடக்குறிப்புகளைத் தரவிறக்கம் செய்து ஆஃப்லைனில் படித்துக்கொள்ளலாம்.
இந்த வகுப்புகள் மற்றும் பாடக்குறிப்புகள் UG TRB தேர்வு நடைபெறும் நாள் வரை செல்லும்.
இல்லை, எங்களது அனைத்து UG TRB Tamil வகுப்புகளும் ஆன்லைன் (Online Mode) மூலம் மட்டுமே வழங்கப்படுகின்றன
TRB பயிற்சியில் அகாடமிக்கு எவ்வளவு அனுபவம் உள்ளது?
கடந்த 10 ஆண்டுகளாக – ஆசிரியர் பணி சார்ந்த போட்டித் தேர்வுகளில் Professor Academy முன்னோடியாகத் திகழ்கிறது.
UG TRB உட்படப் பல்வேறு TRB போட்டித் தேர்வுகளில் State Toppers-ஐ உருவாக்குவதில் Professor Academy என்றும் முன்னிலை வகிக்கின்றது.

எங்களது கடந்த கால சாதனைகள் சில:

  • Last 3 Years Success: கடந்த 3 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கிச் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம்.
  • 2025 Milestone: கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 2,000+ ஆசிரியர்களை அரசுப் பணிக்குத் தயார் செய்து சாதனை படைத்துள்ளோம்.
  • No.1 Academy for Asst. Professors: தமிழகத்திலேயே அதிகப்படியான Assistant Professors-ஐ உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்
  • Syllabus-Focused Planning: ஒவ்வொரு பாடத்தையும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, குறித்த காலத்திற்குள் முழுமையாக முடிப்போம் (Perfect Course Planning).

  • Conceptual Learning: மனப்பாடம் செய்யாமல், பாடங்களை ஆழமாகப் புரிந்து படிப்பதற்கான எளிய கற்பித்தல் முறை (Expert Teaching Methodology).

  • High-Standard Study Materials: எங்களது பாடக்குறிப்புகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் முழுமையான பாடத்திட்டத்தை (100% Syllabus Coverage) உள்ளடக்கியவை.

  • Continuous Assessment: பாடங்கள் முடிந்தவுடன் தொடர்ச்சியான அலகு வாரியான தேர்வுகள் (Unit-wise Tests) மற்றும் தேர்வுக்கு முன் விரிவான திருப்புதல் பயிற்சிகள் (Revision Sessions) வழங்கப்படும்.

  • Complete Mentorship: உங்கள் படிப்பு முதல் தேர்வு எழுதும் வரை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் முழுமையான வழிகாட்டுதல் (Personalized Mentorship) உங்களுக்கு எப்போதும் உண்டு.

ஆம், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்து இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

சேர்க்கை தொடர்பான விரிவான தகவல்களைப் பெறவும், அகாடமியின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் கீழே உள்ள வீடியோ லிங்க்கைப் பார்க்கலாம்: 

Experience online preparation like never before

Related Produtcs

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!